[X] Close

‘இந்தியன் 2’வை தயாரிக்கப் போவது யார்? - ஷங்கர் உருவாக்கியுள்ள ஸ்பெஷல் புக்


2

  • kamadenu
  • Posted: 14 May, 2019 12:36 pm
  • அ+ அ-

‘இந்தியன் 2’ படத்தை தயாரிக்கப் போவது யார்? என்பது விரைவில் தெரியவரும். இப்படத்துக்காக ஸ்பெஷல் புக் ஒன்றை உருவாக்கி, தயாரிப்பு நிறுவனங்களுக்குக் கொடுத்துள்ளார் ஷங்கர்.

மீண்டும் கமல் - ஷங்கர் இணைப்பில் தொடங்கப்பட்ட படம் ‘இந்தியன் 2’. லைகா நிறுவனம் தயாரிக்க, பூஜையுடன் படப்பிடிப்பு தொடங்கப்பட்டது. ஆனால், சில நாட்களிலேயே படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து மக்களவைத் தேர்தல் பிரச்சாரம், தற்போது இடைத்தேர்தல் பிரச்சாரம் என கமல் மும்முரமாக இருக்கிறார்.

‘இந்தியன் 2’ படத்துக்காக கமலுக்கு போடப்பட்ட மேக்கப்பால் அலர்ஜி, பட்ஜெட் அதிகம் என்பதால் லைகா நிறுவனம் தயங்குகிறது உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் உலவுகின்றன. ஆனால், படப்பிடிப்பு தொடர்பாக லைகா நிறுவனம் எவ்வித முயற்சியுமே எடுக்கவில்லை. இதன்மூலம் லைகா நிறுவனம் தயாரிப்பில் இருந்து விலகியிருப்பது உறுதியாகியுள்ளது.

இயக்குநர் ஷங்கரோ, ‘இந்தியன் 2’ படத்தை எடுத்தே ஆகவேண்டும் என்ற முனைப்பில் இருக்கிறார். முதலில் ரிலையன்ஸ் நிறுவனத்திடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இந்தப் பேச்சுவார்த்தைக்கு உதவி புரிந்தவர் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான். படத்துக்கு அனிருத் தான் இசையமைப்பாளர் என்றாலும், ஷங்கருடான நட்பால் ஏ.ஆர்.ரஹ்மான் இந்த உதவியைச் செய்துள்ளார்.

படத்தின் களம் எப்படி, படமாக எப்படியிருக்கும் என்ற முழுவிவரத்தையும் கேட்டுள்ளது ரிலையன்ஸ் நிறுவனம். இதற்காக படத்தின் கதை, நடிகர்களின் லுக், படத்தின் முக்கியமான காட்சிகள் என அனைத்தையும் புத்தக வடிவில் தயாரித்துள்ளது ஷங்கரின் குழு. இதை ரிலையன்ஸ் நிறுவனத்துக்குக் கொடுத்தது மட்டுமன்றி, புதிதாக சன் பிக்சர்ஸ் நிறுவனத்திலும் கொடுத்துள்ளார் ஷங்கர்.

ஷங்கர் இயக்கிய ‘எந்திரன்’ படத்தைத் தயாரித்திருப்பதால், இப்படத்தின் கதைக்களம் எப்படியிருக்கிறது என்ற ஆலோசனையில் இறங்கியுள்ளது சன் பிக்சர்ஸ் நிறுவனம். ஆகவே, ‘இந்தியன் 2’ படத்தை தயாரிக்கப் போவது ரிலையன்ஸ் நிறுவனமா, சன் பிக்சர்ஸ் நிறுவனமா என்பது விரைவில் தெரியவரும்.

வாக்களிக்கலாம் வாங்க

'கேம் ஓவர் ' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close