[X] Close

கமல்ஹாசனின் சர்ச்சை பேச்சு பற்றி கருத்து கூற விரும்பவில்லை: ரஜினிகாந்த்


  • kamadenu
  • Posted: 14 May, 2019 12:17 pm
  • அ+ அ-

கமல்ஹாசனின் ‘முதல் தீவிரவாதி இந்து’ என்ற சர்ச்சை பேச்சு பற்றி கருத்து கூற விரும்பவில்லை என ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், அரவக்குறிச்சி வேட்பாளர் மோகன்ராஜை ஆதரித்து நேற்று முன்தினம் ( ஏப்ரல் 12) தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.

பிரச்சாரத்தில் பேசிய கமல், “இது முஸ்லிம்கள் நிறைய பேர் இருக்கும் இடம் என்பதனால் சொல்லவில்லை. காந்தியார் சிலைக்கு முன்பாக இதனைச் சொல்கிறேன். சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து. அவர் பெயர் நாதுராம் கோட்சே” என்றார்.

கமலின் இந்தப் பேச்சு, சர்ச்சையாகி உள்ளது. பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா, தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜன், பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய், நடிகைகள் கஸ்தூரி, காயத்ரி ரகுராம் உள்ளிட்டவர்கள் தங்களுடைய கண்டனங்களைப் பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில், ‘தர்பார்’ படப்பிடிப்பின் முதல்கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டு மும்பையில் இருந்து சென்னை திரும்பிய ரஜினியிடம் இதுகுறித்து கேள்வி எழுப்பப்பட்டது. ஆனால், அதுபற்றி தான் கருத்து கூற விரும்பவில்லை என்று தெரிவித்துள்ளார் ரஜினி. மேலும், முதல்கட்ட படப்பிடிப்பு நன்றாக இருந்தது என்றும் குறிப்பிட்டார்.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிவரும் ‘தர்பார்’ படத்தில், ஹீரோயினாக நயன்தாரா நடிக்கிறார். பிரகாஷ் ராஜ், நிவேதா தாமஸ், யோகி பாபு, சூரி, ஹரிஷ் உத்தமன், மனோபாலா, போஸ் வெங்கட் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு, அனிருத் இசையமைக்கிறார். ஆக்‌ஷன் த்ரில்லராக உருவாகும் இந்தப் படம், அடுத்த ஆண்டு (2020) பொங்கல் விடுமுறையில் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close