[X] Close

மீண்டும் வில்லியாக நடிக்கும் வரலட்சுமி சரத்குமார்


  • kamadenu
  • Posted: 13 May, 2019 14:29 pm
  • அ+ அ-

‘சர்கார்’ படத்தைத் தொடர்ந்து மீண்டும் வில்லியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் வரலட்சுமி சரத்குமார்.

ஹீரோயினாக மட்டுமின்றி, வில்லி மற்றும் குணச்சித்திரக் கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார் வரலட்சுமி சரத்குமார். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான படம் ‘மாரி 2’. இந்தப் படத்தில் கலெக்டராக நடித்தார். அதற்குமுன் வெளியான ‘சர்கார்’ மற்றும் ‘சண்டக்கோழி 2’ ஆகிய படங்களில் வில்லியாக நடித்தார்.

இந்நிலையில், மீண்டும் வில்லியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் வரலட்சுமி. ஆனால், தமிழில் அல்ல. கே.எஸ்.ரவிகுமார் இயக்கும் தெலுங்குப் படத்தில் வில்லியாக நடிக்கிறார். இந்தப் படத்தில் ஹீரோவாக நந்தமுரி பாலகிருஷ்ணா நடிக்கிறார்.

வரலட்சுமி நடிப்பில் வருகிற 24-ம் தேதி ‘நீயா 2’ படம் ரிலீஸாக இருக்கிறது. வரலட்சுமியுடன் இணைந்து ஜெய், கேத்ரின் தெரேசா, ராய் லட்சுமி ஆகியோர் நடித்துள்ளனர். எல்.சுரேஷ் இயக்கியுள்ள இந்தப் படம், ரொமான்டிக் ஹாரராக உருவாகியுள்ளது.

இதுதவிர ‘வெல்வெட் நகரம்’, ‘கன்னி ராசி’, ‘காட்டேரி’, ‘ரணம்’, ‘ராஜபார்வை’, ‘கன்னித்தீவு’ ஆகிய படங்கள் வரலட்சுமி கைவம் உள்ளன.

வாக்களிக்கலாம் வாங்க

'கேம் ஓவர் ' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close