[X] Close

நாங்கள் உங்களை நேசிக்கிறோம் தோனி: தமிழ் சென்னைக்கு அணிக்கு திரையுலக பிரபலங்கள் வாழ்த்து மழை


  • kamadenu
  • Posted: 13 May, 2019 11:54 am
  • அ+ அ-

ஐபில் இறுதிப் போட்டியில் தோற்றாலும், சென்னை அணிக்கு தமிழ் திரையுலக பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

ராகுல் சாஹரின் கட்டுக்கோப்பான பந்துவீச்சு, மலிங்காவின் கதிகலங்க வைக்கும் கடைசிப்பந்து யார்கர் ஆகியவற்றால் ஹைதராபாத்தில் நடந்த 12-வது ஐபிஎல் போட்டியின் பரபரப்பான இறுதி ஆட்டத்தில் சிஎஸ்கே அணியை ஒரு ரன்னில் வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது மும்பை இந்தியன்ஸ் அணி.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சென்னை அணி, இந்த ஐபிஎல் போட்டியில் மும்பை அணியுடன் மோதிய அனைத்து போட்டிகளிலுமே தோல்வியை தழுவியிருப்பது குறிப்பிடத்தக்கது. சென்னை அணி தோல்வியடைந்தாலும், அதன் கேப்டன் தோனிக்கு தமிழ் திரையுலக பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். அவற்றின் தொகுப்பு:

கார்த்திக் சுப்பராஜ்: தல நாட் அவுட்... தவறான அம்பயரிங்...  சென்னை டீம் நன்றாக விளையாடியது. சிஎஸ்கே ஃபேன் என்பதில் பெருமை. தல தோனிக்கும் டீமுக்கும் ஹேட்ஸ் ஆஃப்.  நாங்கள் உங்களை எப்போதும் நேசிக்கிறோம், நேசிப்போம். வாழ்த்துக்கள் மும்பை இந்தியன்ஸ். உங்கள் கமெண்ட்ரி கேவலமாக இருந்தது மஞ்ச்ரேகர்.

வரலட்சுமி சரத்குமார்: ஒரு ரன்னில் தோல்வி... இதுவே நமக்கு வெற்றிதான் ஏனெனில் நாம் ஒரு சூப்பர் டீம். பலமுறை அவர்கள் நம்மோடு ஃபைனலுக்கு வந்திருக்கிறார்கள்.  நம்ம டீம் மாஸ் வித் க்ளாஸ். நாங்கள் உங்களை நேசிக்கிறோம் தோனி. நமக்கு அடுத்த வருடம் இருக்கிறது. சிஎஸ்கே ஃபார் லைஃப். நீங்க கலக்கிட்டீங்க.. நான் உங்கள ரொம்ப நேசிக்கிறேன்.

ரூபா மஞ்சரி: சிங்கத்தின் சண்டை போல இருந்தது. இருப்பினும் சிஎஸ்கே வழக்கம்போல மீண்டு வரும். அடுத்த ஆண்டு கப் நம்முடையது. ஷேன் வாட்ஸனுக்கு பாரட்டுக்கள்.. வாழ்த்துக்கள் மும்பை இந்தியன்ஸ். எப்போதும் நம்ம தல தோனிதான்.

தமன்: குட்லக் தோனி டீம்.. மும்பை இந்தியன்ஸ் நன்றாக விளையாடினார்கள். என்ன ஒரு கம்பேக் வெற்றி... பும்ராவின் பவுலிங் மும்பைக்கு இந்த வெற்றியை கொடுத்திருக்கிறது.

கோபிநாத்: சிறந்த போட்டி... சிஎஸ்கேவின் விட்டுக் கொடுக்காத அணுகுமுறைய பாராட்டுகிறேன். மும்பை இந்தியன்ஸ் நன்றாக ஆடினார்கள். பும்ராவும் மலிங்காவும் பெரும் முயற்சி செய்து விளையாடினார்கள். கவலைப்படவேண்டாம் வாட்ஸன்.. வாழ்த்துகள். பும்ராவின் யாக்கர்களை உலகக் கோப்பையில் எதிர்பார்க்கிறேன். சிறந்த தொடருக்கு நன்றி தோனி.

விஷ்ணு விஷால்: என்ன ஒரு மேட்ச்.. ஒரு ரோலர் கோஸ்டர் போன்று இருந்தது. சிஎஸ்கேவுக்கு அதிர்ஷ்டம் இல்லை. மலிங்காவின் கடைசி ஓவர் சிறப்பாக இருந்தது. ஆனால் எங்கேயோ ஆட்டத்தை விட்டுவிட்டோம். வெல்டன் மும்பை இந்தியன்ஸ்

அபிஷேக் பச்சன்: மும்பை ஜெயித்து விட்டது. வாழ்த்துக்கள் மும்பை இந்தியன்ஸ். நன்றாக முயற்சி செய்து ஆடினீர்கள் சிஎஸ்கே..

இயக்குநர் ரத்னகுமார்: மலிங்கா, பும்ரா மற்றும் ஹர்திக் பாண்டியா போன்ற ப்ளேயர்கள் இருந்தால் மோடி கூட தமிழ்நாட்டில் ஜெயிக்கமுடியும். ஆனால் தோனியால் மட்டுமே சிஎஸ்கே ஃபைனல்ஸ் வரை வரமுடியும். தோனி ஃபார் லைஃப்.. என்றென்றும் சிஎஸ்கே

ராய் லட்சுமி: என்ன ஒரு மேட்ச்!!! வெற்றி பெற்றமைக்கு வாழ்த்துகள் மும்பை இந்தியன்ஸ். சிஎஸ்கே நன்றாக விளையாடி மும்பைக்கு டஃப் கொடுத்தனர். சிறந்த ஃபைனல்ஸை கொடுத்தமைக்கு இரண்டு டீமுக்கும் வாழ்த்துகள்.

சரத்குமார்: வாழ்த்துகள் மும்பை இந்தியன்ஸ் ஆனால் தோனியின் சர்ச்சைக்குரிய ரன் அவுட், அம்பயரிங் மீது ஒரு களங்கமாகவே இருக்கும். சந்தேகம் அதிகமாக இருந்தால், பேட்மேனுக்கே பலன் சென்றிருக்க வேண்டும்.

சித்தார்த்: என்ன ஒரு ஃபைனல். நன்றாக ஆடினீர்கள் மும்பை இந்தியன்ஸ். எந்த ஒரு ஃபைனலும் இந்த அளவுக்கு நூலிழையில் சென்றிருக்காது. இந்த மேட்ச் எப்படி மாறியது என்பது இன்னும் மர்மமாகவே இருக்கிறது. ஒரே அணியிடம் 4 முறை தோற்பது என்பது கீழ்படிதலின் சிறந்த சாட்சி

அறிவழகன்: 3 அட்டகாசமான சிக்ஸ் உடன் ஷேன் வாட்ஸன் சிறப்பாக ஆடினார். எதற்காக தோனியில் ரன் அவுட்டில் இந்த சர்ச்சைக்குரிய முடிவு? தோற்றாலும் எப்போதும் நீங்கள்தான், சிஎஸ்கே.

வெங்கட்பிரபு: சிறந்த ஐபிஎல் ஃபைனல்களில் ஒன்று. நன்றாக ஆடினீர்கள் மும்பை இந்தியன்ஸ், இப்படிக்கு தீவிர சிஎஸ்கே ரசிகன்

வாக்களிக்கலாம் வாங்க

'கேம் ஓவர் ' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close