[X] Close

'பிக் பாஸ் 3'-ல் நானா? - ரமேஷ் திலக் விளக்கம்


3

  • kamadenu
  • Posted: 10 May, 2019 20:27 pm
  • அ+ அ-

-ஸ்கிரீனன்

'பிக் பாஸ் 3'-ல் பங்கேற்கவுள்ளார் என்று வெளியான செய்திக்கு, தனது ட்விட்டர் வீடியோ மூலமாக விளக்கமளித்துள்ளார் ரமேஷ் திலக்

வானொலி வர்ணனையாளராக தன் வாழ்க்கையைத் தொடங்கி, தற்போது நடிகராக வலம் வருபவர் ரமேஷ் திலக். 'சூது கவ்வும்', 'டிமாண்ட்டி காலனி', 'காக்கா முட்டை', 'விஸ்வாசம்' உள்ளிட்ட பல படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

தற்போது 'பிக் பாஸ் 3' நிகழ்ச்சிக்கான பணிகளை மும்முரமாக தொடங்கியுள்ளது விஜய் டிவி. இம்முறையும் கமலே தொகுத்து வழங்கவுள்ளார். இதன் போட்டியாளர்களை இறுதி செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இதில் ரமேஷ் திலக் பங்கேற்கவுள்ளார் என்று செய்திகள் வெளியானது. பல முன்னணி நடிகர்களோடுநடித்து வருவதால், இச்செய்தி திரையுலகனர் மத்தியில் பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.

இந்தச் செய்தி தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் ரமேஷ் திலக். அதில் "வணக்கம். 'பிக் பாஸ் 3' நிகழ்ச்சியில் நான் பங்கேற்கவுள்ளதாக சில செய்திகள் பார்த்தேன். அது வதந்தி தான். அந்நிகழ்ச்சியில் நான் பங்கேற்கவில்லை. நன்றி" என்று தெரிவித்துள்ளார்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close