[X] Close

ஏன் இந்த சோகப் பதிவு:  ஹ்ரித்திக் ரோஷனின் அறிக்கையை கிண்டல் செய்துள்ள கங்கணா ரணவத்


  • kamadenu
  • Posted: 10 May, 2019 12:12 pm
  • அ+ அ-

-ஸ்கிரீனன்

ஹ்ரித்திக் ரோஷனின் அறிக்கைக்கு 'ஏன் இந்த சோகப் பதிவு' என்று தனது அறிக்கையில் கிண்டல் செய்துள்ளார் கங்கணா ரணவத்

கங்கணா ரணவத்துக்கு, ஹ்ரித்திக் ரோஷனுக்கும் தொடங்கியுள்ள பிரச்சினை இன்னும் முடியவில்லை. இந்த சமயத்தில் ஹ்ரித்திக் ரோஷன் நடித்துள்ள 'சூப்பர் 30' படமும், கங்கணா ரணவத் நடித்துள்ள 'மெண்டல் ஹே கியா' திரைப்படமும் ஜூலை 26-தேதி வெளியாகும் சூழல் வந்தது.

இது இருவருக்கும் உள்ள பிரச்சினையை மேலும் பெரிதாக்கியது. கங்கணாவின் சகோதரி ட்விட்டரில் ஹ்ரித்திக் ரோஷனை கடுமையாக சாடினார். இதனால் பிரச்சினை பெரிதாக, ஹ்ரித்திக் ரோஷன் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

அதில், “இன்னொரு ஊடக கூத்தினால் எனது திரைப்படம் நாசமாவதை அனுமதிக்கக் கூடாது என்ற எண்ணத்தில், இது தரப்போகும் தனிப்பட்ட மன உளைச்சல் மற்றும் மன ரீதியான வன்முறையிலிருந்து என்னை காப்பாற்றிக் கொள்ளவும், எனது 'சூப்பர் 30' படத்தின் வெளியீட்டை தள்ளி வைத்துள்ளேன்” என்று அந்த அறிக்கையில் குறிப்பிட்டார். இதன் மூலம் இப்பிரச்சினை முடிவுக்கு வந்தது.

ஹ்ரித்திக் ரோஷனின் அறிக்கையைத் தொடர்ந்து கங்கணா ரணவத்தின் அறிக்கை ஒன்றை அவரது சகோதரி ரங்கோலி தனது ட்விட்டரில் வெளியிட்டார். அதில், "ஹ்ரித்திக் ரோஷன், மது மண்டேனா மற்றும் ஏக்தா கபூர் மூவரும் சேர்ந்துதான் 'சூப்பர் 30' படத்தின் வெளியீடை தள்ளிப்போடலாம் என்றும், 'மெண்டல் ஹே கியா' படத்தை 26 ஜூலை வெளியிடலாம் என்றும் முடிவு செய்தனர். இந்த முடிவு போன வாரமே எடுக்கப்பட்டுவிட்டது. அவர் ஏன் இந்த சோகப் பதிவை எழுதினார் என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் 'மெண்டல் ஹே கியா' தனியாக வெளியாவதில் எனக்கு மகிழ்ச்சி.

ஆணாதிக்கம் நிறைந்த இந்தத் துறையில் முன்னேறி வந்த எனது தயாரிப்பாளர் ஏக்தா கபூரை நான் வணங்குகிறேன். அவர் செய்யும் காரியம் அவ்வளவு சுலபமானதல்ல. அவரது தைரியத்தையும், அதிகாரத்தையும் நான் பாராட்டுகிறேன்" என்று தெரிவித்துள்ளார் கங்கணா ரணவத். இந்த அறிக்கையின் மூலம்  மீண்டும் ஹ்ரித்திக் ரோஷனை சீண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close