திருச்செந்தூர் கோவிலில் நடிகர் செந்தில் சுவாமி தரிசனம்!


திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் நடிகர் செந்தில் உட்பட மூன்று நடிகர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். அவர்களுடன் செல்ஃபி எடுக்க பக்தர்கள் சூழ்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் நகைச்சுவை நடிகர்கள் செந்தில், கிளி ராமச்சந்திரன், சித்ரகுப்தன் ஆகியோர் தங்களது குடும்பத்தினருடன் சுவாமி தரிசனம் செய்ய வந்திருந்தனர். திருச்செந்தூர் கோவிலின் உள்ளே சென்று அவர்கள் மூலவர் சண்முகர் சூரசம்கார மூர்த்தி பெருமாள் உள்ளிட்ட சன்னதிகளில் சுவாமி தரிசனம் செய்தனர்.

இதனையடுத்து வெளியே வந்த நடிகர் செந்திலைப் பார்த்ததும், கோவிலுக்கு வந்திருந்த பெண் பக்தர் ஒருவர் நடிகர் செந்திலின் காலில் விழுந்து ஆசி வாங்கினார். மேலும் உங்கள் உருவில் முருகரை பார்ப்பதாகவும் கூறி நெகிழ்ச்சி அடைந்தார். தொடர்ந்து பேட்டரி காரில் பயணம் செய்த நடிகர்களுடன் செல்ஃபி எடுக்க பக்தர்கள் கூட்டம் சூழ்ந்ததால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது

x