[X] Close

ஒரே மேடையில் இளையராஜா - எஸ்பிபி: ரசிகர்கள் குஷி


  • kamadenu
  • Posted: 08 May, 2019 12:05 pm
  • அ+ அ-

-ஸ்கிரீனன்

ஜுன் 2-ம் தேதி சென்னையில் நடைபெறவுள்ள இளையராஜா இசைக் கச்சேரியில் எஸ்.பி.பாலசுப்ரமணியம் கலந்து கொள்ளவுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

ராயல்டி பிரச்சினை தொடர்பாக இசையமைப்பாளர் இளையராஜாவுக்கும் எஸ்.பி.பிக்கும் இடையே பிரச்சினை வெடித்தது. இது இசை ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.  அதற்குப் பிறகு நடந்த இளையராஜாவின் எந்தவொரு இசை நிகழ்ச்சியிலும், எஸ்.பி.பி கலந்து கொள்ளவில்லை.

தற்போது, இளையரஜாவின் 75-வது பிறந்த நாள் படுவிமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதற்காக பல்வேறு கல்லூரிகளில் நடத்தப்பட்ட நிகழ்வில், இளையராஜா கலந்து கொண்டு பேசி வருகிறார். இது தொடர்பாக தயாரிப்பாளர் சங்கமும் விழா ஒன்றை எடுத்தது. அதில் ஏ.ஆர்.ரஹ்மான், ரஜினி, கமல், மணிரத்னம், ஷங்கர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டது நினைவுகூரத்தக்கது.

இதன் தொடர்ச்சியாக, இளையராஜாவின் பிறந்த நாளான ஜுன் 2-ம் தேதி ஈ.வி.பி ஃபிலிம் சிட்டியில் ஒரு பிரம்மாண்டமான இசை நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இதில் கலந்து கொள்ளவுள்ள பாடகர்கள் பட்டியலில் எஸ்.பி.பி, யேசுதாஸ், பாம்பே ஜெயஸ்ரீ, மனோ உள்ளிட்ட பல பாடகர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. இதற்கான ஆயுத்தப் பணிகள் மே 22-ம் தேதி முதல் நடைபெறவுள்ளது.

ராயல்டி பிரச்சினைக்குப் பிறகு இளையராஜா - எஸ்.பி.பி சந்திக்கும் முதல் மேடையாக இது அமையும் எனத் தெரிகிறது. இதனால் இசை ரசிகர்கள் மத்தியில் பெரும் உற்சாகம் தொற்றிக்கொண்டுள்ளது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close