[X] Close

கார்ப்பரேட்டுகளின் அரசு கவலைப்படாது! காலா பா.ரஞ்சித் ட்விட்டரில் காட்டம்


sterlite-protest-tngovt-pa-ranjith

  • kamadenu
  • Posted: 23 May, 2018 11:34 am
  • அ+ அ-

ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி அமைதியான முறையில் தூத்துக்குடி மக்கள் போராட்டம் நடத்தி வந்தார்கள். நூறாவது நாளான நேற்று (22.5.18) திடீரென 144 தடை உத்தரவு போடப்பட்டு, மக்களின் மீது தடியடி நடத்தினார்கள் காவல்துறையினர். கண்ணீர்ப்புகை குண்டுகளை வீசினார்கள். துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இதில் ஒன்பது பேர் பலியானார்கள். ஏராளமான மக்கள் படுகாயத்துடன் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

இதுகுறித்து தமிழ்த் திரையுலகில் பலரும் தங்களின் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், ரஜினியின் காலா பட இயக்குநர் பா.ரஞ்சித் தன் ட்விட்டர் பக்கத்தில், ’’அரசு எப்போதும் மக்களுக்கானதாக இல்லவே இல்லை. அரசு என்பது வன்முறை - அதிகாரம் - கொடுங்கோலன் - பயங்கரவாதம். நிலம், நீர் மற்றும் மக்களின் ரத்தம் உறிந்து கொழிக்கும் கார்ப்பரேட்டுகளின் அரசே! நீ ஒருபோதும் கவலைகொள்ளமாட்டாய். உனக்குத் தெரியும். மறதி கலையில் கைதேர்ந்தவர்கள் நம் மக்கள்’’ என்று பா.ரஞ்சித் தெரிவித்திருக்கிறார்.

 

வாக்களிக்கலாம் வாங்க

'கேம் ஓவர் ' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close