[X] Close

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வன்முறை: ஹெச்.ராஜாவின் கருத்துக்கு ’மூடர்கூடம்’ நவீன் பதிலடி


moodar-koodam-naveen-reply-to-raja

  • kamadenu
  • Posted: 23 May, 2018 11:32 am
  • அ+ அ-

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி கடந்த நூறுநாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர் மக்கள். நூறாவது நாளான நேற்று, போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 9 பேர் பரிதாபமாக பலியானார்கள்.

இதுகுறித்து பாஜகவின் ஹெச்.ராஜா தெரிவித்திருந்த ட்வீட்டர் கருத்துக்கு இயக்குநர் நவீன் பதில் அளித்துள்ளார்.

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராடிய மக்கள் மீது தடியடி நடத்திய காவல்துறை, கண்ணீர்ப்புகை குண்டுகளை வீசியதுடன் துப்பாக்கிச் சூடும் நடத்தியது. இந்த வன்முறையில் இதுவரை 9 பேர் பலியாகி உள்ளனர். ஏராளமானோர் படுகாயம் அடைந்துள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக, கம்யூனிஸ்ட் தலைவர்களில் ஒருவரான டி.கே.ரங்கராஜன் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘ஸ்டெர்லைட் ஆலையை மூட ஜனநாயக ரீதியாக மக்கள் திரண்டு போராடும்போது, காவல்துறை தடியடி, கண்ணீர்ப்புகை, துப்பாக்கிச் சூடு நடத்தியதை வன்மையாகக் கண்டிக்கிறேன்’ என்று தெரிவித்தார்.

இவரின் இந்த ட்வீட்டைக் குறிப்பிட்டு, பாஜகவைச் சேர்ந்த ஹெச்.ராஜா, ‘’போராட்டம் கலவரமாக மாறும்போது, வேறு வழி இல்லை’’ என்று தன் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்தார். ராஜாவின் இந்தக் கருத்து, சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சையை உண்டாக்கி உள்ளது. ஏராளமானோர் அவரை திட்டித் தீர்த்துவிட்டார்கள்.

இந்தநிலையில், மூடர்கூடம் இயக்குநர் நவீன், ‘’என் தாய்தமிழ்நாட்டில் நியாயமாக உமக்கு எதிராக ஒரு போராட்டம் உதித்தாக வேண்டிய தேவை என்றோ வந்துவிட்டது. இதுவே தாமதம்தான். அப்படி ஒரு போராட்டம் கலவரமாக மாறி, பட்டியலில் உன் பெயர் இடம்பெறுமாயின், இப்படி ஒரு கேவலமான பதிவை நீ இடுவாயா?’’ என்று காட்டமாகத் தெரிவித்திருக்கிறார் இயக்குநர் நவீன்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close