ரஜினிகாந்த் நடித்துள்ள ‘வேட்டையன்’ படத்தை அடுத்து, அவர் நடிக்கும் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ‘கூலி’ என்று தலைப்பு வைத்துள்ளனர். இதில் ஸ்ருதிஹாசன், ரஜினியின் மகளாக நடிக்க இருப்பதாகச் செய்திகள் வெளியாயின. இந்நிலையில் அது உறுதியாகியுள்ளது. சத்யராஜ், ரஜினியின் நண்பராக நடிக்க இருக்கிறார். மேலும் சில முன்னணி நடிகர்கள் இந்தப் படத்தில் நடிக்க இருக்கின்றனர்.
கிரீஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்கிறார். அனிருத் இசை அமைக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நேற்று தொடங்கியது. படத்துக்காக அங்கு பிரம்மாண்ட செட் போடப்பட்டுள்ளது