[X] Close

'விஸ்வாசம்' 100-வது நாள்: படக்குழுவினர் நெகிழ்ச்சி


100

  • kamadenu
  • Posted: 19 Apr, 2019 18:29 pm
  • அ+ அ-

-ஸ்கிரீனன்

'விஸ்வாசம்' படம் வெளியாகி 100 நாட்கள் ஆனதை முன்னிட்டு, படக்குழுவினர் நெகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.

சிவா இயக்கத்தில் அஜித், நயன்தாரா, அனிகா, விவேக், ஜெகபதி பாபு, ரோபோ சங்கர் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'விஸ்வாசம்'. ஜனவரி 10-ம் தேதி ரஜினி நடிப்பில் வெளியான 'பேட்ட' படத்துடன் வெளியானது.

தமிழகத்தில் 'விஸ்வாசம்' படத்துக்கு பெரும் ஆதரவு கிடைத்தது. விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் என பலருக்கும் நல்ல லாபம் கிடைத்தது. இந்தாண்டின் துவக்கத்திலேயே வெளியாகி அனைத்து தரப்புக்கு நல்ல லாபம் கொடுத்த படம் என்று விநியோகஸ்தர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர்.

இப்படம் இன்றுடன் (ஏப்ரல் 19) வெளியாகி 100 நாட்களைக் கடந்துள்ளது. இதனால் படக்குழுவினர், விநியோகஸ்தர்கள் உள்ளிட்ட அனைவருமே மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக படக்குழுவினர் தங்களுடைய ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது:

தயாரிப்பு நிறுவனமான சத்யஜோதி பிலிம்ஸ்: அஜித் சார் ரசிகர்களுக்கும் குடும்ப நேயர்களுக்கும் அவர்கள் எங்கள் விஸ்வாசம் படத்துக்கு அளித்த சளைக்காத ஆதரவுக்காக நன்றி தெரிவிக்கிறோம். எப்போதுமே எங்களால் மறக்க முடியாத ஒரு படமாக விஸ்வாசம் இருக்கும். உணர்ச்சிகர மகிழ்வுத் தருணமாகும் இது.

இயகுநர் சிவா: நன்று தல அஜித் சார், அதே போல் நயந்தாரா, ஜகபதி சாருக்கும் நன்றி. அனைத்து நடிகர்கள், ரசிகர்கள், ஊடகங்கள், சினிமா விரும்பிகள், குடும்ப நேயர்கள், சத்யஜோதி பிலிம்ஸ் எங்களை நேசிக்கும் அனைவருக்கும் எங்கள் நன்றி.

தமிழக விநியோக்ஸ்தரனா கே.ஜே.ஆர் நிறுவனம்: இந்த அபாரமான பிளாக்பஸ்டர் வெற்றிக்கு நீங்கள்தான் காரணம்.  இந்த மிகப்பெரிய வெற்றியைச் சேர்ந்து கொண்டாடுவோம்

'விஸ்வாசம்' படத்துக்குக் கிடைத்த மாபெரும் வரவேற்பைத் தொடர்ந்து, 'நேர்கொண்ட பார்வை' படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் அஜித். எச்.வினோத் இயக்கியுள்ள இப்படம் ஆகஸ்ட் 10-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close