[X] Close
 

‘நீ என்ன துப்பறிவாளனா?’ - விஷாலை திட்டித்தீர்த்த டி.ராஜேந்தர்


tr-lashes-out-at-vishal

  • நெல்லை ஜனா
  • Posted: 13 May, 2018 18:36 pm
  • அ+ அ-

விஷால் நடிப்பில் தற்போது வெளியாகியுள்ள திரைப்படம் ‘இரும்புத்திரை’. பி.எஸ்.மித்ரன் இயக்கியுள்ள இந்தப் படத்தில், வில்லனாக அர்ஜுனும், ஹீரோயினாக சமந்தாவும் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். விஷால் ஃபிலிம் ஃபேக்டரி தயாரித்துள்ள படத்தை, லைகா புரொடக்‌ஷன்ஸ் வெளியிட்டுள்ளது.

டிஜிட்டல் இந்தியாவில் ஏற்படும் பிரச்சனைகளை மையமாக வைத்து  இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் விஷாலுக்கு எதிராக பாரதிராஜா, ராதாரவி, டி.ராஜேந்தர் உள்ளிட்டோர் இன்று செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, விஷால் மீது அவர்கள் கடுமையான குற்றச்சாட்டுகளை முன் வைத்தனர்.

‘‘தயாரிப்பாளர் சங்க தேர்தலில் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதற்காகவே நான் போட்டியிடவில்லை. துப்பறிவாளன் படத்தில் நடித்தால் நீ என்ன பெரிய துப்பறிவாளனா?  வேலை நிறுத்தம் செய்து எந்த பயனும் இல்லை. 200 திரையரங்குகள் தான் ஒதுக்கப்படும் என்று வாக்குறுதி கூறிவிட்டு, அவருடைய ‘இரும்புத்திரை’ படத்தை மட்டும் 300க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியிட்டிருக்கிறார்’’ எனக்கூறினார். இதுபோலவே நடிகர் ராதாரவி பேசும், தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளாக தமிழர்களே வர வேண்டும் எனக்கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

 
 




Kalathin Vasanai - Kindle Edition


m7

d7

[X] Close