[X] Close

‘‘மீண்டும் உங்களை சந்திக்க வருகிறேன்’’ - பிக் பாஸ் குறித்து கமல் ட்விட்டரில் வீடியோ பதிவு


bigg-boss-tamil

  • நெல்லை ஜெனா
  • Posted: 13 May, 2018 12:41 pm
  • அ+ அ-

விஜய் டிவியில் கடந்த வருடம் ஒளிபரப்பான நிகழ்ச்சி ‘பிக் பாஸ்’. டிவி, செல்போன், பத்திரிகை என எந்த வெளியுலகத் தொடர்பும் இல்லாமல், 100 நாட்கள் ஒரு வீட்டுக்குள் இருப்பதுதான் இந்த நிகழ்ச்சியின் போட்டி. அத்துடன், வீட்டுக்குள்ளேயே பல போட்டிகளும் நடத்தப்படும்.

கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய இந்த நிகழ்ச்சியில், ஆரவ், ஓவியா, சினேகன், வையாபுரி, காயத்ரி ரகுராம், பிந்து மாதவி, ஹரிஷ் கல்யாண், ஹார்த்தி, அனுயா, காஜல், கணேஷ் வெங்கட்ராம், கஞ்சா கருப்பு, ரைஸா வில்சன், பரணி, ஷக்தி வாசு, சுஜா வருணி, ஜூலி, நமிதா, ஸ்ரீ என மொத்தம் 19 பேர் போட்டியாளர்களாகக் கலந்து கொண்டனர்.

கடந்த வருடம் ஜூன் 25 ஆம் தேதி தொடங்கிய இந்த நிகழ்ச்சி, செப்டம்பர் 30 ஆம் தேதி முடிவடைந்தது. இதில், ஆரவ் போட்டியின் வெற்றியாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து பிக்பாஸ்

இரண்டாவது சீஸன்,  ஜூன் 17 ஆம் தேதி முதல் நிகழ்ச்சி ஒளிபரப்பாக இருக்கிறது. இதனையும், கமல்ஹாசனே தொகுத்து வழங்குகிறார்.

இந்நிலையில் பிக்பாஸ் இரண்டாவது சீஸன் நிகழ்ச்சிகான விளம்பர வீடியோவை கமல், தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், ‘மீண்டும் என் மக்களைச் சந்திக்க வருகிறேன். உங்கள் நான்" என கமல் பதிவிட்டிருக்கிறார்.

 

வாக்களிக்கலாம் வாங்க

'மிஸ்டர் லோக்கல்' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close