[X] Close

அரசியல் அழுத்தங்களுக்கு நடுவே நொறுங்கும் மனித உணர்ச்சிகள்


  • Posted: 18 Dec, 2013 03:31 am
  • அ+ அ-

விதார்த், ஜானவி, சரவணன் உள்ளிட்டோர் நடித்துள்ள ‘ஆயிரம் பொற்காசுகள்’ திரைப்படம் விரைவில் வெளிவர உள்ளது. அறிமுக இயக்குநர் ரவி முருகையா இயக்கியுள்ளார்.

‘‘சினிமா இயக்கும் வாய்ப்பு என்பது 13 ஆண்டு போராட்டத்துக்குப் பிறகு கிடைத்துள்ளது. ஆனபோதும், ‘இத்தனை காலமாக வாய்ப்பு கிடைக்கவில்லையே’ என்ற வெறுப்பு எதுவும் வரவில்லை. நாளாக நாளாக இந்த திரையுலகம் மீது காதல்தான் அதிகரிக்கிறது. இது திரும்பிச் செல்ல முடியாத ஒருவழிச் சாலை. விரக்தியிலும் ஒரு மகிழ்ச்சி இருக்கத்தான் செய்கிறது..’’ என்று தொடங்கும் இயக்குநர் ரவி முருகையாவுடன் ஒரு நேர்காணல்..

‘ஆயிரம் பொற்காசுகள்’ படம் குறித்து..

‘முகவரி’ படத்தில் ‘10 அடியில் தங்கம்’ என்ற நீதிக்கதையை ரகுவரன் சொல்வார். அதுதான் இப்படத்துக்கான இன்ஸ்பிரேஷன். கிராமத்தில் இருக்கும் வெள்ளந்தி மனிதர்கள் பற்றிய கதை. எவ்வளவுதான் பணம், சொத்து சுகம் இருந்தாலும், கீழே பத்து ரூபாய் நோட்டு கிடந்தால் எடுக்காமல் போகமாட்டோம். மனிதர்களின் ஆசை எப்படியெல்லாம் இருக்கிறது என்பதை இப்படம் பேசும். தஞ்சாவூர் அருகே உள்ள குருவாடிப்பட்டி என்ற கிராமத்தில் முழு படத்தையும் 38 நாட்கள் ஷுட்டிங் செய்தேன்.

படத்தின் கதை பற்றி..

இருப்பதை விட்டுவிட்டு, இல்லாததை தேடிப் போவதுதான் ‘ஆயிரம் பொற் காசுகள்’. அரசின் இலவசப் பொருட்களை வைத்து மட்டுமே வாழ்க்கை நடத்தும் சோம்பேறிதான் சரவணன். அரசு திட்டத்தில் கழிப்பறை கட்டும்போது, எதிர்பாராதவிதமாக ஒரு புதையல் கிடைக்கிறது. அதற்குப் பிறகு நடக்கும் விஷயங்கள் இன்னும் சுவாரசியமாக இருக்கும். முழு கிராமத்துப் பின்னணியில் முழு நகைச்சுவை படம். சினிமா பார்க்க வருபவர்கள் வயிறு குலுங்க சிரிக்கலாம்.

அரசின் திட்டங்களை கிண்டல் செய்யும் படமா?

கிண்டல் எதுவும் இல்லை. பூனை மலம் கழித்துவிட்டு, மறக்காமல் அதை மூடிவிட்டுச் செல்லும். இதைப் பார்த்து தான் மனிதன் கழிப்பிடம் கட்ட ஆரம்பித் தான். ஆக, கழிப்பிடம் கட்டுவதில் பூனை தான் மனிதர்களுக்கு குரு. திறந்தவெளி யில் மலம் கழிப்பதால் சுகாதாரக் கேடு கள் ஏற்படுகின்றன. அதனால்தான் அவ் வாறு செய்யக்கூடாது என்று அரசு கூறு கிறது. அரசு சொல்வதை சரியாக கடைபிடி யுங்கள் என்றுதான் சொல்லியிருக்கோம்.

வித்தியாசமான கதைகளிலேயே நடிப்பதால்தான் விதார்த்தை தேர்வு செய்தீர்களா?

அவர் எனக்கு நல்ல நண்பர். இப்படத்துக்கு முன்பு 3 கதைகள் வரை கொடுத்திருக்கிறேன். இருப்பினும், ‘இந்த கதையை கேட்காமல் நடியுங்கள். வித்தியாசமாக இருக்கும்’ என்றேன். அவரும் கதையே கேட்காமலே நடித்தார். அந்த நம்பிக்கைக்கு முதலில் நன்றி. சரவணன் கதாபாத்திரத்துக்கு நிறைய பேரை தேடி, கடைசியில் அவரை நடிக்க வைத்தோம். கிராமத்தில் போகிற, வருகிறவர்களை எல்லாம் புரணி பேசிக்கொண்டு வீட்டிலேயே சிலர் இருப்பார்கள். தலையாரி, மின் ஊழியர்கள், ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை என எதற்கு ஆட்கள் வந்தாலும் கிராமத்தில் பதில் சொல்வதற்கென்றே ஒருத்தர் இருப்பார். அதுதான் ஆணிமுத்து கேரக்டர். அதைத்தான் சரவணன் பண்ணியிருக்கார். தமிழ்நாதனாக விதார்த், பூங்கோதையாக ஜானவி நடித்துள்ளனர்.

திரையுலகில் நன்கு பரிச்சயமான மேஸ்திரி ராமலிங்கத்தை எப்படி தயாரிப்பாளர் ஆக்கினீர்கள்?

அவர் கதைகள் கேட்டுட்டு இருப்பதாக சொன்னார்கள். ஃபயர் கார்த்திக் என்ற சண்டை இயக்குநர் மூலமாக அவரை சந்தித்து கதை சொன்னேன். அவரும் கிராமத்துக்காரர், கதையும் கிராமத்துக் கதை என்பதால் ஒன்றிப் போய்விட்டார். அவர் உடனே ஓ.கே சொல்ல, நேரடியாக படப்பிடிப்புக்கு சென்றுவிட்டோம். முதல் நாள் படப்பிடிப்புக்கு வந்து கைகொடுத்தார். பின்னர், முழு படமும் முடிந்த பிறகுதான் பார்த்தார். என் மீது அவ்வளவு நம்பிக்கை வைத்துள்ளார். படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன. அதேபோல, படமும் மாபெரும் வரவேற்பை பெறும்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close