[X] Close

திமுக கூட்டணிக்கு கரு.பழனியப்பன் பிரச்சாரம்: கஸ்தூரி கிண்டல்


  • kamadenu
  • Posted: 10 Apr, 2019 19:51 pm
  • அ+ அ-

திமுக கூட்டணிக்கு ஆதரவாக கரு.பழனியப்பன் பிரச்சாரம் செய்து வருவதை, நடிகை கஸ்தூரி தனது ட்விட்டர் பக்கத்தில் கிண்டல் செய்துள்ளார்.

மக்களவைத் தேர்தல் பிரச்சாரக் களத்தில் இம்முறை பல்வேறு புது பிரபலங்கள் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அரசியல் கருத்துகளை மிகவும் சுவாரஸ்யமாக பல்வேறு மேடைகளில் பேசி வந்த கரு.பழனியப்பன், இம்முறை திமுகவுக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்து வருகிறார்.

மதுரை மக்களவைத் தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் கம்யூனிஸ்ட் வேட்பாளர் சு.வெங்கடேசனை ஆதரித்து முதலில் தீவிர பிரச்சாரம் செய்த கரு. பழனியப்பன் அதனைத் தொடர்ந்து திமுக கூட்டணிக்கு ஆதரவாக பல்வேறு ஊர்களில் பிரச்சாரம் செய்து வருகிறார்.

கரு.பழனியப்பனின் இந்தப் பிரச்சாரப் பயணத்தை கஸ்தூரி கிண்டல் செய்துள்ளார். இது தொடர்பாக தன் ட்விட்டர் பக்கத்தில், ''கடைசியில கரு பழனியப்பன் திமுகவா.... நான் கூட சிவப்புச் சிந்தனையாளர், சு.வெ.க்கு மட்டும் பிரச்சாரம் பண்ணுறாருனு முதல்ல நினைச்சேன்... ஆனா எல்லாருக்கும் பண்ணுறாரு போல. குடும்ப டிவில ஒரு ப்ரோக்ராம் பார்சல்!''என்று கஸ்தூரி தெரிவித்துள்ளார்.

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close