[X] Close

'டெட்பூல்' கதாநாயகனுக்கு குரல் கொடுக்கும் ரன்வீர் சிங்


ranveer-singh-deadpool-2-dubbing

  • கார்த்திக் கிருஷ்ணா
  • Posted: 07 May, 2018 14:18 pm
  • அ+ அ-

'டெட்பூல் 2' படத்தின் இந்தி டப்பிங்கில் கதாநாயகனுக்கு பின்னணி பேசவிருக்கிறார் பாலிவுட் நட்சத்திரம் ரன்வீர் சிங். 

ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டூடியோஸ் தயாரிப்பான 'டெட்பூல்' புகழ்பெற்ற மார்வல் காமிக்ஸின் அடிப்படையில் எடுக்கப்படும் சூப்பர் ஹீரோ படம். முதல் பாகத்தின் வெற்றிக்குப் பிறகு தற்போது இரண்டாம் பாகம் மே 18ஆம் தேதி வெளியாகிறது. ரயன் ரேனால்ட்ஸ் கதாநாயகனாக நடித்திருக்கும் இந்தப் படம், இந்தியாவின் முக்கிய மாநில மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியாகிறது. 

டெட்பூல், உடலில் எங்கு அடிப்பட்டாலும் அது தானாகவே குணமாகும் சூப்பர் பவர் உள்ள நாயகன். வழக்கமாக சூப்பர் ஹீரோ படங்கள் குழந்தைகள், சிறுவர்களை மனதில் வைத்தே எடுக்கப்படும். ஆனால் டெட்பூல் 2 அதீத வன்முறை, தீவிர/கெட்ட வார்த்தை கலந்த வசனங்கள் என  ஏ சான்றிதழ் பெற்று வெளியாகிறது. 

"டெட்பூல் கதாபாத்திரத்தைப் போன்றே ரன்வீர் சிங்கும் நகைச்சுவை உணர்வு உள்ள புத்திசாலி. தைரியமானவர், அற்புதமான நடிகர். எங்களது மிகப்பெரிய சூப்பர் ஹீரோ படத்துக்கு அவரை பேச வைப்பதில் எங்களுக்கு மிக்க மகிழ்ச்சி" என பாக்ஸ் ஸ்டார் ஸ்டூடியோஸின் இந்தியத் தலைவர் விஜய் சிங் தெரிவித்துள்ளார். 

- பிடிஐ

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close