[X] Close

விஜய் சேதுபதிக்கு ஊட்டிவிடும் சிம்பு: வைரலாகும் புகைப்படம்


simbu-feed-to-vijay-sethupathi

  • காவேரி மாணிக்கம்
  • Posted: 03 May, 2018 13:07 pm
  • அ+ அ-

ஷூட்டிங் ஸ்பாட்டில் விஜய் சேதுபதிக்கு சிம்பு ஊட்டிவிடும் புகைப்படம், சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகிவரும் படம் ‘செக்கச் சிவந்த வானம்’. அரவிந்த் சாமி, சிம்பு, விஜய் சேதுபதி, அருண் விஜய், ஜோதிகா, அதிதி ராவ், ஐஸ்வர்யா ராஜேஷ், பிரகாஷ் ராஜ், மன்சூரலிகான், அப்பாணி சரத் ஆகியோர் இந்தப் படத்தில் நடிக்கின்றனர். மணிரத்னத்தின் ‘மெட்ராஸ் டாக்கீஸ்’ நிறுவனத்துடன் இணைந்து லைகா புரொடக்‌ஷன்ஸ் படத்தைத் தயாரிக்கிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.
பிப்ரவரி மாதம் இந்தப் படத்தின் ஷூட்டிங் தொடங்கி நடைபெற்று வருகிறது. ஷூட்டிங் ஸ்பாட்டில் சிம்பு - விஜய் சேதுபதி இருவரும் நெருக்கமான நண்பர்கள் ஆகிவிட்டார்களாம். விஜய் சேதுபதிக்கு ஸ்பூனில் சிம்பு சாப்பாடு ஊட்டிவிடுவது போன்ற புகைப்படம் சமீபத்தில் வெளியானது. இந்தப் புகைப்படம், சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close