[X] Close

‘மகாவீர் கர்ணா’ அப்டேட்: மீண்டும் உடல் எடையை அதிகரிக்கும் விக்ரம்


vikram-gain-weight-for-mahaveer-karna

  • kamadenu
  • Posted: 03 May, 2018 12:47 pm
  • அ+ அ-

பெரும் பொருட்செலவில் உருவாகும் ‘மகாவீர் கர்ணா’ படத்துக்காக தனது உடல் எடையை அதிகரித்து அஜானுபாகுவாக மாறவுள்ளார் விக்ரம்.

‘சாமி 2’ மற்றும் ‘துருவ நட்சத்திரம்’ ஆகிய படங்களைத் தொடர்ந்து ‘மகாவீர் கர்ணா’ படத்தில் நடிக்கவுள்ளார் விக்ரம். இத்திரைப்படம் சுமார் 300 கோடி ரூபாய் பொருட்செலவில் உருவாகவுள்ளது.

'Ennu Ninte Moideen' மலையாள படத்தின் இயக்குநரான ஆர்.எஸ்.விமல் இயக்கத்தில் உருவாகவுள்ள இப்படத்தை நியூயார்க்கில் உள்ள யுனைடெட் ஃபிலிம் கிங்டம் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இந்தியில் உருவாக்கப்பட்டு தமிழ் மற்றும் தெலுங்கில் டப்பிங் செய்து வெளியிட முடிவெடுத்திருக்கிறார்கள்.

தனது கேரக்டருக்காக உடலமைப்பில் எந்த எல்லை வரைக்கும் செல்லும் விக்ரம், இப்படத்துக்காக உடல் எடையை அதிகரித்து அஜானுபாகுவாக மாறவுள்ளார். இதற்கான பணிகளை ‘சாமி 2’ மற்றும் ‘துருவ நட்சத்திரம்’ படப்பணிகள் முடிந்தவுடன் தொடங்கவுள்ளார் விக்ரம்.

அக்டோபர் மாதம் படப்பிடிப்பு தொடங்கப்பட்டு 2019 டிசம்பரில் வெளியாகும் என படக்குழு அறிவித்திருக்கிறது. விக்ரமுடன் நடிக்கவிருப்பவர்கள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகிறது.

-கா.இசக்கி முத்து

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close