[X] Close

சிவகார்த்திகேயனுடன் கூட்டணி அமைந்தது எப்படி? - இயக்குநர் ராஜேஷ் விளக்கம்


director-rajesh-about-sivakarthikeyan

  • kamadenu
  • Posted: 03 May, 2018 12:44 pm
  • அ+ அ-

சிவகார்த்திகேயனுடன் கூட்டணி எப்படி அமைந்தது என்று இயக்குநர் ராஜேஷ் விளக்கமளித்திருக்கிறார். 

ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள படத்தின் பூஜை நேற்று (மே 3) நடைபெற்றது. ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்கவுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு ஜுலையில் தொடங்க திட்டமிட்டு இருக்கிறார்கள். தற்போது சிவகார்த்திகேயனுடன் நடிக்கும் நடிகர், நடிகைகள் தேர்வு மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகிறது.

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகும் ’சீமராஜா’ மற்றும் ‘ராஜேஷ் படம்’ ஆகிய படங்களைத் தொடர்ந்தே ரவிக்குமார் இயக்கும் படம் வெளியாகும் என தெரிகிறது. இந்நிலையில், சிவகார்த்திகேயன் படம் குறித்து இயக்குநர் ராஜேஷிடம் கேட்ட போது கூறியதாவது:

’ரெமோ’ படத்துக்குப் பிறகு சிவகார்த்திகேயனும், நானும் படம் குறித்து பேசினோம். ஆனால், அப்போது நடக்கவில்லை. இப்போது எங்கள் இருவரையும் இணைந்து படம் தயாரிக்கும் ஞானவேல்ராஜா சாருக்கு தான் நன்றி. தற்போது இப்படத்தின் கதைக்கு இறுதிவடிவம் அளித்து வருகிறேன். சதீஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பது உறுதியாகியுள்ளது. விரைவில் நாயகி மற்றும் இதர நடிகர்கள் முறையாக அறிவிக்கவுள்ளோம். 

ஸ்டூடியோ க்ரீன் - சிவகார்த்திகேயன் படத்தை முதலில் விக்னேஷ் சிவன் தான் இயக்குவதாக இருந்தது. ஆனால், அவர் கதையை முழுமையாக்க அதிக நேரமாகும் என்று தெரிவித்தார். அதே சமயம், ஞானவேல்ராஜா சாரும் சிவகார்த்திகேயனை வைத்து குறைந்த நாட்களில் ஒரு படம் எடுக்க நினைத்தார். 

நான் தயாராக வைத்திருந்த கதையும், சிவகார்த்திகேயனுக்கு பிடித்தததால் உடனடியாக படம் பண்ணுவது உறுதியானது. விக்னேஷ் சிவனும் சிவகார்த்திகேயன் படத்துக்கான கதையை தயார் செய்து வருகிறார். அப்பணி முடிந்தவுடன் அவருடைய படமும் துவங்கும்.

இவ்வாறு இயக்குநர் ராஜேஷ் தெரிவித்தார்.

-கா.இசக்கி முத்து

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close