[X] Close

பழசை நினைவுபடுத்தும் ‘தேவதாஸ்’


  • kamadenu
  • Posted: 01 Apr, 2019 07:11 am
  • அ+ அ-

இயக்குநரும், நடிகருமான தம்பி ராமையா, மீண்டும் தன் மகன் உமாபதி ராமையாவுக்காக ஒரு படம் தயாரித்து வருகிறார். புதுமுக இயக்குநர் இரா.மகேஷ் இயக்கிவரும் இப்படத்தில் உமாபதியுடன் யோகிபாபு, மனிஷா யாதவ், ஐரா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இப்படத்துக்கு ‘தேவதாஸ்’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

இன்பமும், துன்பமும் கலந்தது மனித வாழ்க்கை என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால், ஒரு மனிதனுக்கு மிகப் பெரிய சந்தோஷமும், மிகப் பெரிய துக்கமும், ஒரே நேரத்தில் வந்தால், அதன் விளைவுகள் எப்படி இருக்கும் என்பதே இப்படத்தின் கதைக்களம். இந்த உணர்வுப்பூர்வமான கதையில் நகைச்சுவை கலந்து, ஜனரஞ்சகமாக திரைக்கதை அமைத்துள்ளோம். படத்தைப் பார்க்கும் ஒவ்வொருவரும் தாங்கள் கடந்துவந்த பாதை, சந்தித்த, அனுபவித்த நினைவுகளை கட்டாயம் அசைபோடுவார்கள் என்கிறது படக்குழு.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close