நிகிலின் `ஸ்பை’ படத்துக்கு ஹாலிவுட் ஒளிப்பதிவாளர்


நிகில் சித்தார்த்தா நடிக்கும் ’ஸ்பை’ பான் இந்தியா படமாக உருவாகிறது.

தெலுங்கு நடிகர் நிகில் சித்தார்த்தா. இவர், கார்த்திகேயா, எக்கடிக்கி போதாவு சின்னவாடு, கேசவா, கிர்ராக் பார்ட்டி, கணிதன் படத்தின் ரீமேக்காக அர்ஜுன் சரவணன் உட்பட பல படங்களில் நடித்துள்ளார். இவர் அடுத்து நடிக்கும் படத்துக்கு ஸ்பை என்று டைட்டில் வைத்துள்ளனர். இதை கேரி பி.எச் இயக்குகிறார். படத்தை, சரண் தேஜ் உப்பலாபதி மற்றும் இடி என்டர்டெயின்மென்ட் சார்பில் கே.ராஜசேகர் ரெட்டி தயாரிக்கின்றனர்.

ஜூலியன் அமரு எஸ்டார்டா

தெலுங்கு ஹிந்தி தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் உருவாகும் இந்தப் படம், தசரா பண்டிகைக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கதையை தயாரிப்பாளர் ராஜசேகர் ரெட்டி எழுதியுள்ளார். ஐஸ்வர்யா மேனன் நாயகியாக நடிக்கிறார். ஆக்சன் காட்சிகள் நிறைந்த சஸ்பென்ஸ் த்ரில்லராக படம் உருவாகிறது. ஹாலிவுட் படங்களில் பணியாற்றிய ஜூலியன் அமரு எஸ்டார்டா ஒளிப்பதிவு செய்கிறார்.

சண்டைக் காட்சிகளையும் ஹாலிவுட் ஸ்டன்ட் டீம் உருவாக்க இருக்கிறது. படத்திற்கு ஶ்ரீ சரண் பகாலா இசையமைக்கிறார்.

x