நடிகை கடத்தல் வழக்கு: காவ்யா மாதவனிடம் நாளை விசாரணை


கேரளாவில் கடந்த 2017-ம் ஆண்டு பிரபல நடிகை காரில் கடத்தப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இந்த வழக்கில் நடிகர் திலீப் உட்பட 7 பேர் மீது வழக்கு நடந்து வருகிறது. இந்நிலையில் இந்த வழக்கில் திலீப்பின் மனைவி நடிகை காவ்யா மாதவனுக்கும் தொடர்பு உள்ளது என்பதை உறுதிப்படுத்தும் ஆடியோ வெளியாகியுள்ளது.

நடிகர் திலீப், ’இந்த தண்டனையை நான் அனுபவிக்க வேண்டியதில்லை. இன்னொரு பெண் அனுபவிக்க வேண்டியது. நாங்கள் அவளைக் காப்பாற்றினோம். இப்போ நான் தண்டிக்கப்படுகிறேன்’ என்று கூறுவது போல ஆடியோ ஒன்று வெளியாகியுள்ளது. திலீப் குறிப்பிடும் அந்த இன்னொரு பெண், காவ்யாதான் என்று போலீஸார் நம்புகின்றனர். ஆனால், நடிகர் திலீப் அது தன்னுடைய குரல் இல்லை என்று விசாரணையின்போது தெரிவித்துள்ளார்.

காவ்யா மாதவன்

இந்நிலையில் காவ்யா மாதவனிடம் போலீஸார் நாளை விசாரணை நடத்த உள்ளனர். அவர் எட்டாவது குற்றவாளியாக இந்த வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளார். எந்த இடத்தில் விசாரணையை நடத்த வேண்டும் என்கிற முடிவையும் போலீஸார் காவியாவிடமே விட்டுள்ளனர். அவர் குறிப்பிடும் இடத்தில் விசாரணை நடத்தப்படும். அப்போது, திலீப்புக்கு எதிராகப் புகார்களைக் கூறி வரும் இயக்குநர் பாலச்சந்திரகுமாரும் விசாரிக்கப்பட இருப்பதாகக் கூறப்படுகிறது.

இவர்களிடம் விசாரணை முடிந்த பிறகு குற்றப்பிரிவு போலீஸார் நடிகர் திலீப்பை மீண்டும் விசாரிக்க உள்ளனர்.

x