[X] Close

கிரவுட் ஃபண்டிங் முறையில் ஊர் கூடி தேர் இழுக்கப் போகிறோம்: சுதாகர், கார்த்திக், கோபி நேர்காணல்


  • kamadenu
  • Posted: 27 Mar, 2019 08:09 am
  • அ+ அ-

-சந்திப்பு:கா.இசக்கிமுத்து

கிரவுட் ஃபண்டிங் முறைப்படி படம் எடுக்க களம் இறங்கியிருக்கிறார் கள் ‘பரிதாபங்கள்’ கோபி - சுதாகர் குழுவினர். அறிமுக இயக்குநர் கார்த்திக் இயக்கும் இந்தப் படத்துக்கு இதுவரை மக்கள் அளித்துள்ள தொகை மட்டுமே ரூ.1.22 கோடி. இந்தப் படத்துக்கு மொத்த பட்ஜெட் ரூ.8 கோடியையும் கிரவுட் ஃபண்டிங் மூலம்தான் திரட்ட வேண்டும் என்று களமிறங்கியிருக்கும் கோபி - சுதாகர் - கார்த்திக் மூவரையும் சந்தித்து பேசியதில் இருந்து:

இப்போதே நீங்கள் நன்றாக பிரபல மாகிவிட்டீர்கள். யூ-டியூபில் இல்லாத ஒன்று என்ன சினிமாவில் கிடைக்கும் என நினைக்கிறீர்கள்?

மக்கள் ஒவ்வொரு ஊடகத்துக்கும் ஒவ்வொரு மாதிரியான மதிப்பீடு வைத் திருக்கிறார்கள். அதில் எப்போதும் சினிமாவுக்குத்தான் முதல் இடம். சினிமாவில் காட்டப்படும் சின்ன விஷ யம்கூட பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும். எங்கள் திறமையை சினிமாவில் காட்டும்போது, அது இன்னும் விரைவாக அதிக மக்களைச் சென்றடையும் என்று நம்புகிறோம். நாங்கள் சினிமாவுக்காக யூ-டியூபை விடப்போவதில்லை. இரண்டிலுமே தொடருவோம்.

இயக்குநர் கார்த்திக், நீங்கள் எப்படி இவர்களுடன் இணைந்தீர்கள்?

மூன்று மாதங்களுக்கு முன்பாக எங்களின் பொதுவான நண்பர் விக்னேஷ் மூலமாகத்தான் கோபி - சுதாகர் இருவரும் அறிமுகமானார்கள். அந்த சமயத்தில் கோபி - சுதாகர் படம் எடுக்கவிருப்பதாகவும், கதைகள் கேட்டுக்கொண்டிருப்பதாகவும் தெரிந் தது. என்னிடம் ஒரு கதை இருந்தது. நான் இவர்களிடம் நான் வைத்திருந்த அந்தக் கதையை சொன்னேன். அது இவர்களுக்குப் பிடித்துப் போக, கிரவுட் ஃபண்டிங் யோசனை யுடன் படத்தை எடுக்க தொடங்கினோம்.

உண்மையில் அந்தக் கதையில் முதலில் ஒரு பிரதான கதாபாத்திரம் மட்டுமே இருந்தது.

இவர்களை சந்தித்தப் பிறகு அதை இரண்டு கதாபாத்திரங்களாக மாற்றினேன். இவர்களுக்கென ஒரு பாணி இருக்கிறது. அதையெல்லாம் மனதில் வைத்து இந்தப் படத்தின் திரைக்கதை உருவானது.

கோபி - சுதாகர் என்றாலே அரசியல் நையாண்டி, நகைச்சுவைதான். உங்கள் கதையில் இயல்பாகவே நகைச்சுவை இருந்ததா? இல்லை இவர்களுக்காக எழுதினீர்களா?

இந்தப் படமே நகைச்சுவைக் கதையை மையமாகக் கொண்டது தான். அதனால் அடிப்படை கதையில் எந்த மாறுதலும் இல்லை. அவர்களுக் கும் அதனால்தான் இந்தக் கதை பிடித் தது. இந்தக் கதையில் தாங்கள் நடிப் பது பொருத்தமாக இருக்குமா என்று யோசித்துதான் நடிக்க ஒப்புக்கொண் டார்கள். இது அரசியல் நையாண்டிப் படம் கிடையாது. இவர்களுக்கு படத் தில் ஜோடியே கிடையாது. இப்படத் தில் நடிக்க நிறைய துணை நடிகர், நடிகைகளிடம் பேசிக் கொண்டிருக் கிறோம். கண்டிப்பாக இப்படத்தில் பெரிய நடிகர் கூட்டமே இருக்கும். ஆபாசத்துக்கு துளியும் வேலையிருக் காது. குடும்பம் குடும்பமாக தியேட்ட ருக்கு வந்து பார்த்து ரசிக்கும் பொழுது போக்குப் படமாக இது இருக்கும்.

கிரவுட் ஃபண்டிங் என்கிற பெரிய முயற்சியில் ஏன் சிக்குகிறீர்கள்?

500 ரூபாய் போடுபவருக்கு ரிஸ்க் அதிகமா? 5 கோடி ரூபாய் போடுபவ ருக்கு ரிஸ்க் அதிகமா என்றால், 5 கோடியில்தான் அதிகம். அந்த ரிஸ்கை குறைக்க வேண்டும். யூ-டியூபில் நீங்கள் அரசியல் நையாண்டி செய்பவர் கள். அதனால் படமெடுப்பதில் பிரச் சினை வரலாம் என்று சில தயாரிப் பாளர்கள் உண்மையிலேயே பயந் தார்கள். பெரிய அளவில் பணம் போடும் ஒருவர் ஏன் பயப்பட வேண்டும் என்று நினைத்துதான், கிரவுட் ஃபண்டிங் திட்டத்தில் இறங்கினோம்.

இந்த கிரவுட் ஃபண்டிங் திரட்டும் அனுபவம் எப்படி இருக்கிறது?

பணம் கொடுத்தவர்களை தொலைப்பேசியில் ஒவ்வொருவராக அழைத்து நன்றி சொன்னோம். அப்போது சில பேர் பேசியது நெகிழ்ச்சியாக இருந்தது. பல நாள் உங்கள் வீடியோக்களைப் பார்த்து சிரித்திருக்கிறோம். அதற்கான கட்டணமாக இதை வைத்துக் கொள்ளுங்கள். எங்களுக்கு திரும்பத் தர வேண்டாம் என்கிறரீதியில் அவர்கள் பேசினார்கள்.

என் தாய் புற்றுநோயில் அவதிப் பட்டார். அவரின் கடைசி நாட்களில் உங்கள் வீடியோவைப் பார்த்துப் பார்த்து ரசித்து சிரித்தார். அதற்கு கைமாறாக ஏதோ செய்ய வேண்டும் என நினைத்தேன். இதோ இந்தப் பணத்தை அனுப்புகிறேன் என்று ஒருவர் சொன்னது உணர்ச்சிவசப்பட வைத்தது.

8 கோடி ரூபாயும் கிரவுட் பண்டிங் முறையில் திரட்டுவது பெரிய முயற்சி அல்லவா?

படத்தின் தயாரிப்புக்கு என ஒரு செலவு இருக்கிறது. வெளியீடுக்கு செலவு, விளம்பரத்துக்கு செலவு, திரையில் ஓட்ட செலவு என ஒரு படத்துக்கான மொத்த செலவுதான் இந்த 8 கோடி ரூபாய். ஊர் கூடி தேர் இழுக்கப் போகிறோம். இந்த முயற்சியை ஒரு சவாலாக எடுத்துக் கொண்டுதான் களமிறங்கினோம்.கதையிலும் கிராபிக்ஸ், செட் என நிறைய செலவு இருக்கிறது. ஒருமுறை பணம் சேகரித்துவிட்டால் அவ்வளவுதான். ‘மீண்டும் ஒரே ஒரு நாள் படப்பிடிப்பு இருக்கிறது. அதற்கு பணம் தேவைப்படுகிறது. கொடுங்கள்’ என்றெல்லாம் யாரிடமும் கேட்க முடி யாது. அதனால்தான் மொத்த செலவுக் கான தொகையையும் ஒரே நேரத் தில் சேகரிக்க வேண்டியிருக்கிறது.

படம்: எல்.சீனிவாசன்

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close