[X] Close

திரை விமர்சனம்- உறியடி 2


2

  • kamadenu
  • Posted: 07 Apr, 2019 08:27 am
  • அ+ அ-

மக்களவைத் தேர்தலில் முதல்வர் குமாரசாமியின் மகன் நிகில், மண்டியா தொகுதியிலும், அவரது அண்ணனும், பொதுப்பணித்துறை அமைச்சருமான ரேவண்ணாவின் மகன் பிரஜ்வல், ஹாசன் தொகுதியிலும் மஜத சார்பில் போட்டியிடுகின்றனர்.

இதற்கான வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருக்கும் நிலையில், குடும்ப அரசியலில் மஜத ஈடுபடுவதாக பாஜக விமர்சித்துள்ளது.

இதற்கு பதிலளிக்கும் வகையில் முதல்வர் குமாரசாமி கூறியதாவது:என் தந்தையை தொடர்ந்து நானும் எனது அண்ணனும் மக்கள் சேவையில் ஈடுபட்டுள்ளோம். இரவு பகல் பாராமல் நாங்கள் உழைப்பதை மக்களும் ஏற்றுக்கொண்டுள்ளனர். இதனால், எங்கள் குடும்பத்தை சேர்ந்தவர்கள் அரசியலுக்கு வருவதை மக்கள் எதிர்க்கவில்லை. அதன் காரணமாகவே இந்த தேர்தலில் நிகிலும், பிரஜ்வலும் போட்டியிடுகின்றனர்.

எனது மகன் நிகில், சினிமாவில் வெற்றிகரமாக‌ நடித்து வருகிறார். அதேபோல, பிரஜ்வலும் அவரது தொழிலில் கவனம் செலுத்தி வருகிறார். இருவரும் பொழுதுபோக்குக்காக தேர்தலில் போட்டியிடவில்லை. மக்களுக்கு சேவை செய்வதற்காகவே போட்டியிடுகிறார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close