[X] Close

முதல் பார்வை: உறியடி 2


2

  • kamadenu
  • Posted: 05 Apr, 2019 14:52 pm
  • அ+ அ-

-மு.யுவராஜ்

மாற்று அரசியலை விரும்புவதால் மக்கள் நீதி மய்யத்துடன் கூட்டணி அமைத்துள்ளதாக இந்திய குடி யரசு கட்சித் தலைவர் செ.கு.தமி ழரசன் தெரிவித்துள்ளார்.

‘இந்து தமிழ்’ நாளிதழுக்கு செ.கு.தமிழரசன் அளித்த சிறப்பு பேட்டி:

30 ஆண்டுகளுக்கு மேலாக இணைந்திருந்த அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறக் காரணம் என்ன?

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, பாஜகவின் துணை அமைப்பாக அதிமுக மாறி செயல்பட்டு வருகிறது. பாஜகவின் எண்ணத்துக்கு மாறாக எந்த வகையிலும் செயல்படக் கூடாது என்ற வகையிலேயே தமிழக அரசின் ஒவ்வொரு நடவடிக்கையும் உள்ளது. அது தலித் மக்களுக்கு எதிரான நடவடிக்கைகளாக மாறும் நிலை உருவாகிவிட்டது. அதனால், அந்த அணியில் சேர முடியாமல் தவிர்க்கும் நிலை ஏற்பட்டது.

தலித்கள் மீதான காங்கிரஸின் அணுகுமுறை, பாஜகவில் இருந்து வேறுபட்டதா?

பாஜக கொள்கை ரீதியாக தலித் களுக்கு எதிராக செயல்படுகிறது. காங்கிரஸ் தலித்களுக்கு ஆதரவாக இருப்பது போல நீலிக் கண்ணீர் வடித்துவிட்டு, நடைமுறையில் பல குளறுபடிக்கு காரணமாகிவிட்டது.

கடந்த காலங்களில் காங்கிரஸ் முரண்பாடாக செயல்பட்டதால் தான் தலித் மக்களிடம் இருந்து அந்நியப்பட்டது. சனாதனவாதி களின் நம்பிக்கையைப் பெறு வதற்காக காங்கிரஸும் பாஜகவை போல செயல்படுகிறது. எல்லோரும் சேர்ந்து மதச்சார்பின்மையை வேடிக்கை ஆக்கிவிட்டார்கள்.

மக்கள் நீதி மய்யத்துடன் கூட் டணி அமைப்பது என எந்த அடிப்படையில் முடிவு செய்தீர்கள்?

பாஜக அணியில் சேருவதில்லை என்று முடிவு எடுத்தவுடன், தமிழகத்தில் மாற்று அரசியல் வேண்டும் என்று விரும்பினோம். தமிழகத்தில் மாற்று அரசியலை முன்வைக்க கமல்ஹாசனுடன் கூட்டணி வைக்க முடிவு செய் தோம்.

வன்கொடுமை தடுப்பு சட்டத்தை மாற்ற வேண்டும் என்று சமீபகாலமாக ஒருசில கட்சிகள் நேரடியாகவே பேசி வருகின்றன. அந்த கட்சிகளையும் திமுக, அதிமுக அங்கீகரித்து, கூட்டணி வைத்துக் கொள்கின்றன. தமிழக அரசியலில் திராவிட இயக்கங்கள் எந்த அளவு முரண்பாடான விஷயங்களை செய்கின்றன என்பதை இது காட்டுகிறது. எனவே, சிறுபான்மை, தலித் மக்களுக்கு நம்பிக்கை அளிக்க, மாற்று அரசியலுக்காக கூட்டணி அமைத்துள்ளோம்.

மாற்று அரசியலுக்கு கமல்தான் சரியானவர் என்று எதன் அடிப் படையில் தேர்வு செய்தீர்கள்?

களத்தில் வேறு யார் அப்படி இருக்கிறார்கள். கமல்ஹாசன் கட்சி முதன்முறையாக தேர்தலில் போட்டியிடுகிறது. கடந்த காலங் களில் நடந்த முரண்பாடுகளுக்கு பொறுப்பு என்று மக்கள் நீதி மய்யத்தை கருத முடியாது. தவிர, கடந்தகால அனுபவத்தில் இருந்து மாறுபட்ட கருத்துகளைதான் கமல் ஹாசன் முன்வைக்கிறார். அது மாற்று அரசியலாகத் தெரிகிறது.

எந்தெந்த தொகுதிகளில் போட்டி யிட உள்ளீர்கள்?

காஞ்சிபுரம் மக்களவை தொகுதி, திருப்போரூர், சோளிங்கர், குடியாத்தம் ஆகிய 3 சட்டப் பேரவை தொகுதிகளில் போட்டி யிடுகிறோம்.

அரசியலில் ரஜினிகாந்த் நுழைந் தால் கமல்ஹாசனின் முக்கியத் துவம் குறையும் என்று நினைக் கிறீர்களா?

ரஜினிகாந்த் மீது கமல்ஹாசன் மிகுந்த மரியாதை வைத்துள்ளார். அதனால்தான், ஆதரவு கேட்டு ரஜினிகாந்துக்கு வெளிப்படை யாகவே அழைப்பு விடுத்தார். மக்கள் மத்தியில் இந்த தேர் தல் பெரிய மாறுதல்களை ஏற்படுத் தும். மாறுபட்ட அணிகளின் முரண் பாடுகளால், மக்கள் தெளிவான முடிவுகளை வழங்குவார்கள்.

அந்த சூழலில், தமிழகத்தில் புதிய அரசியல் களம் உருவாகும். அப்போது எதுவும் நடக்கலாம். ரஜினிகாந்த் ஒருவேளை அரசியலுக்கு வந்தால் இரண்டு பேரும் சேர்ந்துகூட களம் காணலாம். அதற்கான வாய்ப்பு இல்லை என்று சொல்ல முடியாது.

கருணாநிதி, ஜெயலலிதா இல் லாத சூழலில் நடக்கும் தேர்தல் யாருக்கு சாதகமாக இருக்கும்?

அவர்களது காலம் வேறு. அவர்கள் கூட்டணியைக்கூட முடிந்த வரை பெரிய அளவில் முரண்பாடு கள் இல்லாத வகையில்தான் அமைத்தார்கள். அந்த நிலை இப் போது இல்லை. பிரதமர் வேட்பாளர் யார் என்று மு.க.ஸ்டாலின் ஒரு கருத்து கூறுகிறார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தேசிய தலைமை ஒன்று சொல்கிறது. இந்திய கம்யூனிஸ்ட் தேசிய தலைமை வேறொன்று சொல் கிறது.

இதே கட்சிகள் வேறு மாநிலங்களில் வேறு கட்சிகளுடன் அணிவகுக்கின்றன. மாறுபட்ட கருத்துகளை சொல்கின்றன. பாஜக அணியிலும்கூட மாறுபட்ட கருத்துகள் உள்ளன. எனவே, மாற்று அரசியல் வருவதை தவிர்க்க முடியாது.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close