[X] Close

ஓபிஎஸ் முன்னிலையில் நீலகிரி  அதிமுகவினர் கோஷ்டி பூசல்: மாவட்ட செயலாளரை மாற்றக்கோரி ஆர்ப்பாட்டம்


  • kamadenu
  • Posted: 04 Apr, 2019 10:39 am
  • அ+ அ-

‘ஆதித்யா வர்மா’ படத்தில், துருவ் விக்ரம் அப்பாவாக கெளதம் மேனன் நடிக்கிறார்.

விஜய் தேவரகொண்டா நடிப்பில் சூப்பர் ஹிட்டான தெலுங்குப் படம் ‘அர்ஜுன் ரெட்டி’. இப்படத்துக்கு கிடைத்த வரவேற்பால், தமிழ் மற்றும் இந்தியில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. தமிழில் பாலா இயக்கத்தில் 'வர்மா' என்ற பெயரில் படப்பிடிப்பு தொடங்கியது. துருவ் விக்ரம், மேகா, ரைசா வில்சன் உள்ளிட்ட பலர் நடித்த இப்படத்தின் இறுதிப் பிரதியைப் பார்த்த தயாரிப்பாளர்களுக்கு திருப்தி அளிக்கவில்லை.

எனவே, துருவ் விக்ரமைத் தவிர இதர நடிகர்கள் அனைவரும் மாற்றப்பட்டு, மறுபடியும் ‘அர்ஜுன் ரெட்டி’ உருவாக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. மீண்டும் ரீமேக் படப்பிடிப்புக்காக இயக்குநர், நாயகி மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களை இறுதி செய்யும் பணியில் துரிதமாக ஈடுபட்டது படக்குழு. 

இதில், துருவ் விக்ரம் ஜோடியாக பனிடா சாந்து ஒப்பந்தம் செய்யப்பட்டார். இவர், இந்தியில் வருண் தவான் நடித்த ‘அக்டோபர்’ படத்தில் நாயகியாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய ரீமேக் படப்பிடிப்பை, ‘அர்ஜுன் ரெட்டி’ இயக்குநர் சந்தீப் வங்காவிடம் முதல்நிலை உதவி இயக்குநராகப் பணிபுரிந்த கிரிசாய்யா இயக்குகிறார். ‘ஆதித்யா வர்மா’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளராக ரவி.கே.சந்திரனும், இசையமைப்பாளராக ரதனும் பணிபுரிகின்றனர்.

இந்நிலையில், துருவ் விக்ரமுக்கு அப்பாவாக நடிக்க இயக்குநர் கெளதம் மேனன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் எனத் தகவல் கிடைத்துள்ளது. ஒரே கட்டமாக ஒட்டுமொத்த படப்பிடிப்பையும் முடித்து, விரைவில் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close