[X] Close

திமுக ஆட்சிக்கு வந்தால் பழைய விலைக்கே வீட்டு எரிவாயு உருளை வழங்கப்படும்: நீலகிரி தொகுதி வேட்பாளர் ஆ.ராசா உறுதி


  • kamadenu
  • Posted: 02 Apr, 2019 12:08 pm
  • அ+ அ-

சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் நடிக்கவுள்ள படத்தின் ஒளிபரப்பு உரிமையை, ஜீ தமிழ் தொலைக்காட்சி கைப்பற்றியுள்ளது.

சுந்தர்.சி இயக்கத்தில் கடைசியாக வெளியான படம் ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’. ‘அத்தரண்டிகி தாரேதி’ தெலுங்குப் படத்தின் ரீமேக் இது. சிம்பு ஹீரோவாக நடித்த இந்தப் படத்தில், கேத்ரின் தெரேசா மற்றும் மேகா ஆகாஷ் இருவரும் ஹீரோயினாக நடித்தனர்.

இந்தப் படத்தைத் தொடர்ந்து, விஷாலை ஹீரோவாக வைத்து ஒரு படத்தை இயக்குகிறார் சுந்தர்.சி. விஷால் ஃபிலிம் ஃபேக்டரி மற்றும் ட்ரைடென்ட் ஆர்ட்ஸ் ஆகிய இரண்டு நிறுவனங்களும் இணைந்து இந்தப் படத்தைத் தயாரிக்கின்றன.

இதில், விஷாலுக்கு ஜோடியாக தமன்னா நடிக்கிறார். இருவரும் ஏற்கெனவே ‘கத்தி சண்டை’ படத்தில் ஜோடியாக நடித்துள்ளனர். இந்தப் படத்துக்கு ‘ஹிப் ஹாப் தமிழா’ ஆதி இசையமைக்கிறார்.

ஜனவரி மாதமே இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், என்ன காரணத்தினாலோ இதுவரை தொடங்கவில்லை. இருந்தாலும், இந்தப் படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையைக் கைப்பற்றியுள்ளது ஜீ தமிழ்.

விஷால் நடிப்பில் ‘அயோக்யா’ படம் தற்போது ரிலீஸுக்குத் தயாராகி வருகிறது. மே மாதம் இந்தப் படம் ரிலீஸாகும் எனத் தெரிகிறது. ராஷி கண்ணா, பார்த்திபன், இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார் உள்ளிட்ட பலர் விஷாலுடன் இதில் நடித்துள்ளனர். சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close