[X] Close

'கோலமாவு கோகிலா' நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன்


  • kamadenu
  • Posted: 28 Mar, 2019 17:20 pm
  • அ+ அ-

பத்தாம் வகுப்புக்கான பொதுத் தேர்வு இன்று தொடங்குகிறது. மாநிலம் முழுவதும் 9.97 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர்.

தமிழகத்தில் மேல்நிலை வகுப்புகளுக்கான பொதுத் தேர்வுகள் கடந்த மார்ச் 1-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. தொடர்ந்து பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று (மார்ச் 14) தொடங்கி 29-ம் தேதி வரை நடைபெறுகிறது.

தொடக்க நாளில் மொழிப் பாடம் முதல் தாள் தேர்வு நடை பெற உள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அமைக்கப்பட் டுள்ள 3,731 தேர்வு மையங்களில் இருந்து 9.97 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர்.

தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிப் பாடங்களுக்கான தேர்வுகள் மதியம் 2 முதல் மாலை 4.45 மணி வரை நடை பெறும். தேர்வு மையங்களில் செல்போனுக்கு தடை விதிக்கப் பட்டுள்ளது.

தேர்வறைகளில் துண்டுத் தாள்களைப் பார்த்து எழுத முயற்சி செய்வது, பிற மாண வர்களின் விடைத்தாள்களைப் பார்த்து காப்பியடிப்பது உள் ளிட்ட ஒழுங்கீன செயல்களில் ஈடுபடும் மாணவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இதற்கு உடந்தையாக இருக்கும் பள்ளி நிர்வாகத்தினர் மீதான நடவடிக்கையும் கடுமையாக இருக்கும் என்று தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.

தேர்வு மையங்களை கண் காணிக்க 5500 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆட் சியர் தலைமையில் தேர்வுக்குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது. குழு வில் மாவட்ட காவல் துறை கண் காணிப்பாளர், மாவட்ட வரு வாய் அதிகாரி, சார்-ஆட்சியர், கோட்டாட்சியர் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர். அவர்கள் கல்வித்துறை அதிகாரிகளுடன் இணைந்து தேர்வு மையங்களில் திடீர் ஆய்வு மேற்கொள்வர்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close