புஷ்பா 2-ம் பாகத்தில் பிரபல இந்தி ஹீரோ?


அல்லு அர்ஜுன்

’புஷ்பா’ படத்தின் அடுத்த பாகத்தில், முக்கிய வேடத்தில் பிரபல இந்தி ஹீரோ ஒருவர் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.

அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியாகி வரவேற்பைப் பெற்றிருக்கும் படம், ’புஷ்பா’. சுகுமார் இயக்கியிருந்த இந்தப் படத்தில், ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடித்திருந்தார். மலையாள நடிகர் பஹத் ஃபாசில், கன்னட நடிகர் தனஞ்செயா, சுனில், அஜய் கோஷ், ராவ் ரமேஷ் உட்பட பலர் நடித்துள்ளனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசை அமைத்துள்ளார். நடிகை சமந்தா ஒரு பாடலுக்கு ஆடியிருந்தார்.

இயக்குநர் சுகுமார், அல்லு அர்ஜுன்

தெலுங்கு தவிர, தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் இந்தப் படம் வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்நிலையில், இந்தப் படத்தின் அடுத்த பாகத்துக்கான வேலைகளைத் தொடங்கிவிட்டார் இயக்குநர் சுகுமார்.

புதிய லொகேஷன்களை அவர் தேடி வருகிறார். வட இந்தியாவிலும் இதன் படப்பிடிப்பு நடக்க இருக்கிறது. புஷ்பா இந்தியிலும் வரவேற்பை பெற்றிருப்பதால், இந்தி ஹீரோ ஒருவரை முக்கிய வேடத்தில் நடிக்க வைக்க முயற்சிகள் நடந்து வருவதாகக் கூறப்படுகிறது. அடுத்த பாகத்தின் ஷூட்டிங் ஏப்ரல் மாதம் தொடங்குகிறது. ஏற்கெனவே நடித்தவர்களுடன் மேலும் சிலர் 2-ம் பாகத்தில் நடிக்க உள்ளனர்.

x