[X] Close

ஜெயலலிதாவாக நடிப்பதில் பெருமை: கங்கணா ரணாவத் மகிழ்ச்சி


  • kamadenu
  • Posted: 23 Mar, 2019 15:24 pm
  • அ+ அ-

நாடு முழுவதும் தூய்மையான நகரங்களுக்காக நடத்தப்பட்ட தர ஆய்வு முடிவில், கோவை மாநகராட்சி 40-வது இடத்தை பிடித்துள்ளது.

மத்திய அரசின் சார்பில் நாடு முழுவதும் உள்ள பல்வேறு மாநகராட்சி, நகராட்சிகளில் தூய்மை பாரதம் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டம் செயல்படுத்தப்படும் நகரங்களில் ஆண்டுதோறும் நாடு முழுவதும் தூய்மையான நகரம் குறித்து ‘‘சுவெச் சர்வெக் ஷான்’’ தர ஆய்வு நடத்தப்பட்டு தர வரிசை வெளியிடப்படும். வழக்கமாக பிப்ரவரி மாத இறுதி அல்லது மார்ச் முதல் வாரத்தில் இந்த ஆய்வு நடத்தப்படும். ஆனால், நடப்பாண்டு மக்களவை தேர்தல் நெருங்குவதையொட்டி, கடந்த ஜனவரி மாதமே ஆய்வு நடத்தப்பட்டது. நாடு முழுவதும் உள்ள நகரங்களில் மத்திய அரசுக் குழுவினர் ஆய்வு செய்தனர்.

கோவை மாநகரில் மத்திய அரசுக் குழுவினர், மாநகராட்சி நிர்வாகத்துக்கு கூட தகவல் தெரிவிக்காமல் ரகசியமாக வந்து ஆய்வு செய்து சென்றனர். ‘‘பொதுமக்களிடம் இருந்து மாநகராட்சி நிர்வாகம் குப்பை சேகரிக்கும் முறை, முறையாக தரம் பிரித்து சேகரிக்கப்படுகிறதா, தரம் பிரிக்கப்பட்ட மக்கும் குப்பை மூலம் இயற்கை உரம் தயாரிப்பு பணி சரிவர மேற்கொள்ளப்படுகிறதா?, தூய்மைப்பணிகள் சரிவர மேற்கொள்ளப் படுகின்றனவா, கழிப்பிடங்கள் முறையாக பராமரிக்கப்படுகின்றனவா’’ என்பது போன்றவை குறித்து ரகசிய ஆய்வு நடத்திச் சென்றுள்ளனர்.

இந்த நிலையில், நாடு முழுவதும் தூய்மையான நகரங்கள் குறித்த தர வரிசைப்பட்டியல் நேற்று மத்திய அரசால் வெளியிடப்பட்டது. இதில், மத்திய பிரதேசத்தின் இந்தூர் முதலிடத்தை பெற்றுள்ளது. கோவை மாநகராட்சி 40-வது இடத்தை பெற்றுள்ளது. 39-வது இடத்தை பெற்று திருச்சி தமிழக அளவில் முதலிடத்தையும், 40-வது இடத்தை பெற்ற கோவை தமிழக அளவில் 2-வது இடத்தையும் பிடித்துள்ளது. கடந்த முறை தூய்மையான நகரங்கள் பட்டியலில் 16-வது இடத்தில் இருந்தது கோவை மாநகராட்சி.

இது குறித்து மாநகராட்சி ஆணையர் ஷ்ரவன் குமார் ஜடாவத் கூறும் போது,‘‘தூய்மையான நகரங்களுக்கான தர ஆய்வில் கோவை மாநகராட்சி 40-வது இடத்தை பிடித்துள்ளது. கடந்த முறை பெற்ற தரத்துக்கும், நடப்பு ஆண்டு பெற்ற தரத்துக்கும் இடையே நிறைய வேறுபாடு உள்ளது. பல்வேறு திட்டங்களை மாநகராட்சி சிறப்பாக செயல்படுத்தியது. தவிர, ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பெரிய திட்டங்கள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது நிறைவடைய மேலும் சில நாட்கள் ஆகும். தர வரிசை பின்னோக்கி செல்ல ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகள் விரைவில் முடிக்கப்படாததும் ஒரு காரணமாக இருக்கலாம்,’’ என்றார்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close