[X] Close

ரஜினி - ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்கவில்லை


keerthy-suresh-not-play-with-rajinikanth

  • காவேரி மாணிக்கம்
  • Posted: 04 Mar, 2019 14:45 pm
  • அ+ அ-

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகும் படத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்கவில்லை எனத் தகவல் கிடைத்துள்ளது.

ரஜினி நடிப்பில் கடைசியாக வெளியான படம் ‘பேட்ட’. கார்த்திக் சுப்பராஜ் இயக்கிய இந்தப் படத்தில், சிம்ரன் மற்றும் த்ரிஷா இருவரும் ரஜினிக்கு ஜோடியாக நடித்தனர். த்ரிஷா ரஜினியின் மனைவியாகவும், சிம்ரன் ரஜினி மேல் காதல் வயப்படுபவராகவும் நடித்தனர். சிம்ரன், த்ரிஷா இருவருமே ரஜினியுடன் இணைந்து நடித்த முதல் படம் இது.

‘பேட்ட’ படத்தைத் தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கப் போகிறார் ரஜினி. லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் இந்தப் படம், அரசியலை மையப்படுத்தி எடுக்கப்பட இருக்கிறது என்று தகவல்கள் உலா வருகின்றன.

‘பேட்ட’ படத்துக்கு அனிருத் இசையமைத்தார். அதுதான் அவர் இசையமைத்த முதல் ரஜினி படம். ‘பேட்ட’ படத்தின் பாடல்கள் ஹிட்டான நிலையில், இந்தப் படத்துக்கும் அனிருத்தே இசையமைக்கிறார். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்கிறார்.

இந்தப் படத்தில் ஹீரோயின்களாக நடிக்க நயன்தாரா மற்றும் கீர்த்தி சுரேஷ் இருவரிடமும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக செய்திகள் வெளியாகின. இந்நிலையில், தற்போது கீர்த்தி சுரேஷ் இந்தப் படத்தில் நடிக்கவில்லை எனத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், நயன்தாராவும் இன்னும் உறுதி செய்யப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.

படத்தின் முன்தயாரிப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ள ஏ.ஆர்.முருகதாஸ், விரைவில் நடிகர் - நடிகைகள் குறித்த விவரங்களை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close