[X] Close
 

ஃபேஸ்புக், ட்விட்டரில் இல்லாதது ஏன்?- கங்கனாவின் சுவாரஸ்ய பதில்


kangana-ranaut-explains-why-she-abstains-from-social-media

  • பாரதி
  • Posted: 15 Apr, 2018 15:29 pm
  • அ+ அ-

ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களில் தான் கணக்கு வைத்துக் கொள்ளாதது குறித்து பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் சுவாரஸ்யமாக பதிலளித்திருக்கிறார்.

தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வது தொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பில் அண்மையில் கங்கனா கலந்து கொண்டார்.

அப்போது அவர், "நான் சமூக வலைதளங்களில் இல்லாததற்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. அவற்றில் முக்கியக் காரணம் அவை நேரத்தை கொல்கின்றன. என்னிடம் பலரும் ஃபேஸ்புக்குல் கணக்கு தொடங்குமாறு கூறியிருக்கின்றனர். நான் ஒரு பிரபலமாக இருப்பதால் எனது ரசிகர்களுக்காகவது நான் கணக்கு தொடங்க வேண்டும். அது கட்டாயம் என்றெல்லாம் கூறியிருக்கிறார்கள். ஆனால், பெயருக்கு ஒரு கணக்கு தொடங்கிவிட்டு அதில் வேறு யாரோ ஒரு ஆள்வைத்து என் சார்பில் போஸ்ட் போடுவதில் எனக்கு உடன்பாடில்லை. அவ்வாறு நான் செய்தால் என் ரசிகர்களுக்கு நான் உண்மையாக இல்லை என்றாகிவிடும். என் லட்சக்கணக்கான ரசிகர்களுடன் ஒரு போலியான உறவை ஏற்படுத்த நான் விரும்பவில்லை" என்றார்.

அவரது இந்த சுவாரஸ்ய பதில் பலரையும் ஈர்த்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

 
 




Kalathin Vasanai - Kindle Edition


[X] Close