[X] Close

'எனை நோக்கி பாயும் தோட்டா' வெளியீட்டிற்கான பேச்சுவார்த்தை தொடக்கம்


enai-nokki-payum-thotta

  • kamadenu
  • Posted: 26 Feb, 2019 15:07 pm
  • அ+ அ-

கெளதம் மேனன் இயக்கத்தில் உருவாகிவுள்ள 'எனை நோக்கி பாயும் தோட்டா' படத்தின் வெளியீட்டில் உள்ள சிக்கலைத் தீர்க்க பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டுள்ளது.

கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் தனுஷ், மேகா ஆகாஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் தொடங்கப்பட்ட படம் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’. தர்புகா சிவா இசையமைப்பாளராக பணிபுரிந்து வருகிறார்.

இப்படத்தின் படப்பிடிப்புக்கு இடையே தனுஷ் ‘விஐபி 2’, ‘ப.பாண்டி’, ‘வடசென்னை’, ‘மாரி 2’ ஆகிய படங்களை முடித்து, வெளியீடும் முடிந்தது. 'எனை நோக்கி பாயும் தோட்டா' படத்த்தயாரிப்பில் நிலவிய சிக்கலால், விக்ரம் நடிப்பில் உருவான ‘துருவ நட்சத்திரம்’ படத்தில் கவனம் செலுத்தத் தொடங்கினார் கெளதம் வாசுதேவ் மேனன்.

2018-ம் ஆண்டு ஜூலை 16-ம் தேதி 'எனை நோக்கி பாயும் தோட்டா' படத்தின் இறுதிகட்டப் படப்பிடிப்பைத் தொடங்கியது படக்குழு. அதனைத் தொடர்ந்து இறுதிகட்டப் பணிகள் அனைத்தையும் முடித்து, தணிக்கையில் 'யு/ஏ' சான்றிதழ் கிடைத்துள்ளது.

அனைத்து பணிகளும் முடிந்துவிட்டதால், தற்போது இப்படத்தின் வெளியீட்டுக்கு உள்ள சிக்கல்களுக்கான பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டுள்ளது. இப்படத்தில் தயாரிப்பாளராக  இருக்கும் எஸ்கேப் ஆர்டிஸ்ட் நிறுவனத்துக்கு உள்ள சிக்கல்களில் தொடங்கி ஒவ்வொன்றுக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு வருகிறது.

இந்நிறுவனம் தயாரித்த 'கயல்', 'மாப்ள சிங்கம்' மற்றும் 'கொடி' படங்களுக்காக வாங்கிய கடன்களில் உள்ள பாக்கிகள், கெளதம் மேனன் தயாரிப்பில் வெளியான 'அச்சம் என்பது மடமையடா' படத்துக்கு வாங்கிய கடன்களில் உள்ள பாக்கிகள் என அனைத்துமே 'எனை நோக்கி பாயும் தோட்டா' படத்தின் மீது வைக்கப்பட்டுள்ளது.

இப்படத்தை வெளிக் கொண்டுவருவதற்கான பேச்சுவார்த்தை, விநியோகஸ்தர்கள் சங்கத்தில் நடைபெற்று வருகிறது. 'எனை நோக்கி பாயும் தோட்டா' படம் வெளியானால் மட்டுமே, தங்களுக்கான பணம் கிடைக்கும் என்பதால் பல பைனான்சியர்களும் இப்பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டுள்ளனர். இதில் நல்ல முடிவு எட்டப்பட்டுள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது.

மார்ச் 28-ம் தேதி வெளியிட்டால் நன்றாக இருக்கும் என்று தீர்மானித்துள்ளனர். அதற்குள் பேச்சுவார்த்தையை முழுமையாக முடித்து, தடையில்லா சான்றிதழ் வாங்கவும் படக்குழு திட்டமிட்டுள்ளது.

'எனை நோக்கி பாயும் தோட்டா' படத்தின் வெளியீட்டுக்குப் பிறகு, 'துருவ நட்சத்திரம்' படத்தின் இறுதிகட்டப் படப்பிடிப்பில் கவனம் செலுத்தவுள்ளார் இயக்குநர் கெளதம் மேனன்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close