[X] Close

‘தளபதி 63’ அப்டேட்: படப்பிடிப்பில் இணையும் நயன்தாரா


nayanthara-will-join-thalapathy-63-from-march-second-week

  • காவேரி மாணிக்கம்
  • Posted: 21 Feb, 2019 14:54 pm
  • அ+ அ-

‘தளபதி 63’ படப்பிடிப்பில், அடுத்த மாதத்தில் இருந்து நயன்தாராவும் கலந்து கொள்கிறார்.

‘தெறி’ மற்றும் ‘மெர்சல்’ படங்களைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக அட்லீ இயக்கத்தில் நடிக்கிறார் விஜய். இன்னும் தலைப்பு வைக்கப்படாத இந்தப் படம், தற்போதைக்கு ‘தளபதி 63’ என்று அழைக்கப்படுகிறது. ஏஜிஎஸ் என்டெர்டெயின்மென்ட்ஸ் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது.

‘மெர்சல்’ படத்துக்கு ஒளிப்பதிவு செய்த ஜி.கே.விஷ்ணு, இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு செய்கிறார். ‘மெர்சல்’, ‘சர்கார்’ படங்களைத் தொடர்ந்து ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். ரூபன் எடிட் செய்ய, கலை இயக்குநராக முத்துராஜ் பணியாற்றுகிறார். சண்டை இயக்குநராக அனல் அரசு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

விஜய் ஜோடியாக நயன்தாரா நடிக்க, விவேக், கதிர், யோகி பாபு, டேனியல் பாலாஜி, ஆனந்த் ராஜ் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்தப் படத்தின் பூஜை, கடந்த ஜனவரி 20-ம் தேதி நடைபெற்றது. தொடர்ந்து, சென்னையில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

1000 சிறுவர்களுடன் விஜய் நடனமாடும் ஓப்பனிங் பாடல் உள்ளிட்ட சில காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், மார்ச் இரண்டாவது வாரத்தில் இருந்து ‘தளபதி 63’ படப்பிடிப்பில் இணைகிறார் நயன்தாரா எனத் தகவல் கிடைத்துள்ளது.

‘வில்லு’ படத்துக்குப் பிறகு நீண்ட வருடங்கள் கழித்து விஜய் - நயன்தாரா இணைந்து நடிப்பதால், இந்தப் படத்துக்கு எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close