[X] Close

’காமராஜரின் மதிய உணவால் வளர்ந்த உடம்பு இது!’ – இளையராஜா நெகிழ்ச்சி


ilayaraaja-75-kamarajar

காமராஜர் - இளையராஜா

  • வி.ராம்ஜி
  • Posted: 19 Feb, 2019 18:35 pm
  • அ+ அ-

வி.ராம்ஜி

‘காமராஜரின் மதிய உணவைச் சாப்பிட்டு வளர்ந்தவன் நான். இந்த உடம்பு, காமராஜரின் உணவைச் சாப்பிட்டு வளர்ந்த உடம்பு. அந்த ருசியை இன்னும் மறக்கவில்லை’ என்று விருதுநகரில் நடந்த விழாவில், இளையராஜா நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

விருதுநகரில் கல்லூரி ஒன்றில், இளையராஜா 75 எனும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் இளையராஜா கலந்துகொண்டு மாணவர்களுடன் உரையாடினார். அவர்களுக்காக பல பாடல்களைப் பாடி அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார்.

முன்னதாக, இளையராஜாவுக்கு கல்லூரி நிர்வாகம் சார்பில், பலத்த வரவேற்பு அளிக்கப்பட்டது.

பிறகு இளையராஜா பேசியதாவது:

அரசியலில் சுத்தமாக இருக்கவேண்டும் என்று நினைப்பவர்கள், மக்களுக்கு நன்மைகள் செய்யவேண்டும் என்பதற்காக அரசியலுக்கு வந்தவர்கள் எல்லோருமே, முதலில் காமராஜர் வாழ்ந்த இல்லத்துக்கு வரவேண்டும். அவர் பிறந்து வளர்ந்து வாழ்ந்த இந்த இல்லத்தில் கால் வைத்து, காமராஜரை சாஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்யவேண்டும். காமராஜரின் ஆசியைப் பெற்றுக் கொண்டு, அரசியல் சேவையாற்ற வேண்டும்.

காமராஜர் வழங்கிய மதிய உணவுத் திட்டத்தில் பயனடைந்த லட்சக்கணக்கான பேரில் நானும் ஒருவன். அந்த மதிய உணவைச் சாப்பிடுவதற்காகவே பள்ளிக்கூடத்துக்குச் சென்றவன் நான்.

தேவாமிர்தமாக மதிய உணவு இருக்கும். அந்த ருசியை இன்னும் மறக்கவில்லை நான். காமராஜரின் மதிய உணவைச் சாப்பிட்டு வளர்ந்த உடம்பு இது.

இவ்வாறு நெகிழ்ச்சியுடன் பேசினார் இளையராஜா.  

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close