[X] Close

சமரசமான விஷ்ணு விஷால் - ஆர்.ஜே.பாலாஜி


vishnu-vishal-rj-balaji-sort-issues-out

  • kamadenu
  • Posted: 19 Feb, 2019 18:13 pm
  • அ+ அ-

'எல்.கே.ஜி' படம் தொடர்பாக நடைபெற்று வந்த மறைமுக மோதலை, பேசி சமரசம செய்து கொண்டனர் ஆர்.ஜே.பாலாஜி மற்றும் விஷ்ணு விஷால்.

பிப்.22-ம் தேதி வெளியாகவுள்ள 'எல்.கே.ஜி' படத்துக்கு காலை 5 மணிக்கு காட்சிகள் ஒதுக்கியது ரோகிணி திரையரங்கம். இது தொடர்பாக விஷ்ணு விஷால் வெளியிட்ட ட்வீட் சர்ச்சைக்குள்ளானது. 

இதனைத் தொடர்ந்து இருவரும் மறைமுகமாக கருத்து மோதலில் ஈடுபட்டனர். இது சமூகவலைத்தளத்தில் பலரையும் முகம் சுழிக்க வைத்தது. மேலும், சிலர் இதுவும் நல்லதொரு விளம்பர யுத்தி என்று கருத்து தெரிவித்தார்கள்.

தற்போது  இந்த மோதல் முடிவுக்கு வந்துள்ளது. இது தொடர்பாக ஆர்.ஜே.பாலாஜி தனது ட்விட்டர் பக்கத்தில், "விஷ்ணு விஷாலிடம் பேசினேன். இரண்டு தரப்பிலுமே சற்று உணர்ச்சி வசப்பட்டதால் தான் அப்படி பேசிவிட்டோம். எங்களுக்குள் இருந்த கருத்து வேறுபாடை பேசித் தீர்த்துக் கொண்டோம். அவருக்கு என்றும் நல்லதே நடக்க வேண்டுகிறேன்.. சமாதானம்" என்று தெரிவித்துள்ளார்.

ஆர்.ஜே.பாலாஜியின் ட்வீட்டை மேற்கொளிட்டு விஷ்ணு விஷால் "ஆமாம் மக்களே. 'எல்.கே.ஜி' படக்குழுவினருக்கு வாழ்த்துகள்" என்று தெரிவித்திருக்கிறார்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close