[X] Close

மெரினா புரட்சியின்போது என்ன செய்தீர்கள் என்று தெரியும்: ஆர்.ஜே.பாலாஜியை மறைமுகமாக சாடிய விஷ்ணு விஷால்


vishnu-vishal-reply-to-rj-balaji

  • kamadenu
  • Posted: 19 Feb, 2019 15:28 pm
  • அ+ அ-

மெரினா புரட்சியின்போது என்ன செய்தீர்கள் என்று தெரியும் என்று ஆர்.ஜே.பாலாஜியை மறைமுகமாக சாடியுள்ளார் விஷ்ணு விஷால்.

'எல்.கே.ஜி' படத்தை விளம்பரப்படுத்த தீவிரமாக பணியாற்றி வருகிறது படக்குழு. ஆர்.ஜே. பாலாஜி நாயகனாக அறிமுகமாகும் இப்படத்தை பிரபு இயக்கியுள்ளார். கதை, திரைக்கதையை ஆர்.ஜே.பாலாஜியே எழுதியுள்ளார். ப்ரியா ஆனந்த், நாஞ்சில் சம்பத் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

'எல்.கே.ஜி' படத்துக்கு உள்ள எதிர்பார்ப்பால் சென்னையிலுள்ள ரோகிணி திரையிரங்கம் காலை 5 மணி காட்சி ஒதுக்கியுள்ளது. இதனை விஷ்ணு விஷால் கிண்டல் செய்ய, அதற்கு பதிலடியாக ஆர்.ஜே.பாலாஜி கருத்து தெரிவித்து வந்தார். இருவருமே நேரடியாக குறிப்பிட்டு ட்வீட் செய்யாமல், ஒருவரை ஒருவர் குறிப்பிடாமல் பேசி வருகிறார்கள்.

இந்த விவகாரத்தில் ஆர்.ஜே.பாலாஜி வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில் "இப்படத்துக்கு உழைத்து வேலை செய்து மெரிட்டில் ஒரு சீட் கிடைத்தால் தான் உண்டு. எங்களுடைய படக்குழுவில் யாரோ தீயணைப்புத் துறையில் பணிபுரிகிறார் என்று கூறி திரையரங்கை மிரட்டி காட்சிகள் எல்லாம் வாங்க முடியாது. 

நாங்கள் நல்லபடியாக படித்து பாஸ் பண்ணினால் மட்டுமே சீட் கிடைக்கும். நாங்கள் நல்லபடியாக படித்து பாஸ் பண்ணி படம் எடுத்துள்ளோம். மறுபடியும் மறுபடியும் ட்விட்டரில் பதில் சொல்லி கை வலிக்கிறது. நாங்களே எங்களை விளம்பரப்படுத்திக் கொள்கிறோம். எங்களுக்கு வேறு யாரும் விளம்பரம் பண்ணத் தேவையில்லை. போய் ரெஸ்ட் எடுங்க" என்று அதில் பேசியுள்ளார் ஆர்.ஜே.பாலாஜி.

இதற்கு பதிலடியாக தனது ட்விட்டர் பக்கத்தில் விஷ்ணு விஷால் கூறியிருப்பதாவது:

உங்கள் அனைவருக்கும் எதிர்வினை என்னவென்பதைக் காட்டவே விரும்பினேன். அவ்வளவே. இப்போதும் எல்லாம் ஆதாரபூர்வமாக விளங்கியிருக்கின்றன. வெகு நாட்களாகவே உண்மையின் பக்கத்தைக் காண்பிக்க விரும்பினேன். உனக்கு வந்தா ரத்தம் எனக்கு வந்தா தக்காளி சட்னியா? 

நான் அநாவசியமாக பேச மாட்டேன் என்பது என்னை அறிந்த எனது ட்விட்டர் நண்பர்களுக்குப் புரியும். சிறிய, நடுத்தர பட்ஜெட் படங்களுக்கும் காலை 5 மணி ஷோக்கான வாய்ப்பு கிடைத்திருக்கிறது என்பது மகிழ்ச்சியளிக்கிறது. இது சினிமாவுக்கு நல்ல விஷயம். ஆனால் விமர்சனம் என்ற பெயரில் மக்களை திசை திருப்புவது எனக்கு வருத்தமளிக்கிறது. அனைவருக்கும் நல் வாழ்த்துகள்.

ஹாஹாஹா ஆரம்பிச்சுட்டான். அனுதாப ஓட்டு வேட்டையை... எனது தந்தை கடந்த இரண்டு ஆண்டுகளாக தீயணைப்புப் படையில் இருக்கிறார். வர்தா புயலின்போதும் அவர் இருந்தார். அவர்கள் எப்படி உயிர்களைக் காப்பாற்றினார்கள் என்பது அனைவருக்கும் தெரியும். நீங்கள் என்ன உதவி செய்தீர்கள் என்பதும் தெரியும். நீங்கள் உள்ளார என்ன செய்தீர்கள் என்பதும் தெரியும். மெரினா புரட்சியின்போது என்ன செய்தீர்கள் என்பதும் தெரியும்.

இவ்வாறு விஷ்ணு விஷால் தெரிவித்துள்ளார்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close