[X] Close

போய் ரெஸ்ட் எடுங்க: விஷ்ணு விஷாலை மறைமுகமாக சாடிய ஆர்.ஜே.பாலாஜி


rj-balaji-reply-to-vishnu-vishal

  • kamadenu
  • Posted: 19 Feb, 2019 15:25 pm
  • அ+ அ-

'எல்.கே.ஜி' படம் தொடர்பாக ஆர்.ஜே.பாலாஜி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் விஷ்ணு விஷாலை மறைமுகமாக சாடியுள்ளார்

'எல்.கே.ஜி' படத்தை விளம்பரப்படுத்த தீவிரமாக பணியாற்றி வருகிறது தயாரிப்பு தரப்பு. இதற்காக பல்வேறு கல்லூரிகளுக்கு சென்று படக்குழுவினர் பேசி வருகின்றனர். ஆர்.ஜே. பாலாஜி நாயகனாக அறிமுகமாகும் இப்படத்தை பிரபு இயக்கியுள்ளார். கதை, திரைக்கதையை ஆர்.ஜே.பாலாஜியே எழுதியுள்ளார். ப்ரியா ஆனந்த், நாஞ்சில் சம்பத் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

'எல்.கே.ஜி' படத்துக்கு உள்ள எதிர்பார்ப்பால் சென்னையிலுள்ள ரோகிணி திரையிரங்கம் காலை 5 மணி காட்சி ஒதுக்கியுள்ளது. இதனை விஷ்ணு விஷால் கிண்டல் செய்ய, அதற்கு பதிலடியாக ஆர்.ஜே.பாலாஜி கருத்து தெரிவித்து வந்தார். இருவருமே நேரடியாக குறிப்பிட்டு ட்வீட் செய்யாமல், ஒருவரை ஒருவர் குறிப்பிடாமல் பேசி வருகிறார்கள்.

தற்போது இந்த விவகாரம் தொடர்பாக காரில் நாஞ்சில் சம்பத்துடன் ஆர்.ஜே.பாலாஜி அமர்ந்து கொண்டு பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

கண் அறுவை சிகிச்சை முடிந்து இன்று தான் நாஞ்சில் சம்பத் சார் எங்களோடு இணைந்துள்ளார். அனைத்து இடங்களுக்கும் விளம்பரப்படுத்தப் போய் கொண்டிருக்கிறோம். வரும் வெள்ளிக்கிழமை 'எல்.கே.ஜி' திரைப்படம் வெளியாகவுள்ளது.

இதுவரை எங்கள் படக்குழுவினர் வெளியிட்ட விளம்பரங்களுக்கு இவ்வளவு ஆதரவு கிடைக்கும் என எதிர்பார்க்கவில்லை. அனைவரது அன்புக்கும் நன்றி. பட்டினப்பாக்கத்தில் 600 sq.feet வீட்டில் தான் நாஞ்சில் சம்பத் இருக்கிறார். பிழைக்கத் தெரியாத மனிதர். 

இப்படத்தில் என்னோடு பணிபுரிந்த அனைவருமே முதல்முறையாக திரையுலகிற்கு வந்தவர்கள். ஆகையால், இப்படத்துக்கு உழைத்து வேலை செய்து மெரிட்டில் ஒரு சீட் கிடைத்தால் தான் உண்டு. எங்களுடைய படக்குழுவில் யாரோ தீயணைப்புத் துறையில் பணிபுரிகிறார் என்று கூறி திரையரங்கை மிரட்டி காட்சிகள் எல்லாம் வாங்க முடியாது. 

நாங்கள் நல்லபடியாக படித்து பாஸ் பண்ணினால் மட்டுமே சீட் கிடைக்கும். நாங்கள் நல்லபடியாக படித்து பாஸ் பண்ணி படம் எடுத்துள்ளோம். மறுபடியும் மறுபடியும் ட்விட்டரில் பதில் சொல்லி கை வலிக்கிறது. நாங்களே எங்களை விளம்பரப்படுத்திக் கொள்கிறோம். எங்களுக்கு வேறு யாரும் விளம்பரம் பண்ணத் தேவையில்லை. போய் ரெஸ்ட் எடுங்க.

இவ்வாறு ஆர்.ஜே.பாலாஜி கூறியுள்ளார்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close