[X] Close

'இந்தியன் 2' படத்துக்கு நோ சொன்ன அஜய் தேவ்கான்


indian-2

  • kamadenu
  • Posted: 13 Feb, 2019 11:13 am
  • அ+ அ-

'இந்தியன் 2' படத்தில் கமலுக்கு வில்லனாக நடிக்க அணுகியதற்கு நோ சொல்லியுள்ளார் இந்தி திரையுலகின் முன்னணி நடிகர் அஜய் தேவ்கான்

கமல்ஹாசன் நடிப்பில், ஷங்கர் இயக்கத்தில் வெளியான படம் ‘இந்தியன்’. தற்போது அதன் இரண்டாம் பாகத்தில் கமல் - ஷங்கர் இருவரும் இணைந்து பணியாற்றி வருகிறார்கள்.

'இந்தியன் 2' படத்தின் படப்பிடிப்பு ஜனவரி 18-ம் தேதி தொடங்கியது. அதன் அடுத்த கட்ட படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளது. லைகா நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரிக்கும் இப்படத்தில் கமல், காஜல் அகர்வால், டெல்லி கணேஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். அனிருத் இசையமைக்க, ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்யவுள்ளார்.

இப்படத்தில் முக்கியமான வில்லன் கதாபாத்திரத்துக்கு அக்‌ஷய்குமார், அஜய் தேவ்கான், அபிஷேக் பச்சன் உள்ளிட்ட பலரை ஷங்கர் அணுகியுள்ளதாக தகவல் வெளியாகின. ஆனால், இதுவரை யாருமே அக்கதாபாத்திரத்துக்கு ஒப்பந்தம் செய்யப்படவில்லை.

தற்போது கமலுக்கு வில்லனாக நடிக்க முடியாது என்று அஜய் தேவ்கான் சொல்லிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. தனக்கு பரிச்சயம் இல்லாத மொழிகளில் நடிப்பதில்லை என்பதால் மட்டுமே முடியாது என அஜய் தேவ்கான் தெரிவித்துள்ளார்.

எழுத்தாளர்கள் ஜெயமோகன், கபிலன் வைரமுத்து, லட்சுமி சரவணகுமார் மூவரும் இணைந்து ‘இந்தியன் 2’வுக்கான வசனங்களை எழுதி வருகின்றனர். 

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close