[X] Close

யுவன் இசையில் பாடும் விஜய் சேதுபதி


sethupathy-sings-in-yuvan

  • Team
  • Posted: 01 Mar, 2018 05:30 am
  • அ+ அ-

யுவன் ஷங்கர் ராஜா இசையில் உருவாகி வரும் 'பேய்பசி' படத்தின் மூலம் விஜய் சேதுபதி பாடகர் ஆகிறார்.

இது தொடர்பாக யுவன் ஷங்கர் ராஜா இன்று தன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், '' என் இசையில் உருவாகி வரும் பேய்பசி படத்துக்காக விஜய் சேதுபதி பாடுகிறார். என் சகோதரர் ஹரி கிருஷ்ணன் பாஸ்கர் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தை ஸ்ரீனிவாஸ் கவிநயம் இயக்குகிறார்'' என்று தெரிவித்துள்ளார்.

'பேய்பசி' படத்தில் அம்ரிதா, டேனியல் பாலாஜி, கருணாகரன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். டோனி சான் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்துக்கு மோகன் முருகதாஸ் படத்தொகுப்புப் பணிகளை மேற்கொள்கிறார். மதன் கலை இயக்கப் பணிகளை கவனிக்க, பூர்ணிமா ராமசாமி ஆடை வடிவமைப்பாளராகப் பணிபுரிகிறார்.

விஜய் சேதுபதி நடிப்பில் '96', 'சூப்பர் டீலக்ஸ்', 'செக்கச் சிவந்த வானம்', 'ஜூங்கா', 'சீதக்காதி' ஆகிய படங்கள் உருவாகி வருகின்றன.

வாக்களிக்கலாம் வாங்க

'கேம் ஓவர் ' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close