[X] Close

’பெட்ரோமேக்ஸ் லைட்டேதான் வேணுமா?’ ஒரே தடவைதான் உடைச்சேன்; ஒரே டேக்குல நடிச்சேன்! - செந்தில் கலகல


senthil

வைதேகி காத்திருந்தாள் - கவுண்டமணி, செந்தில்

  • வி.ராம்ஜி
  • Posted: 09 Feb, 2019 20:59 pm
  • அ+ அ-

வி.ராம்ஜி

‘வைதேகி காத்திருந்தாள்’ படத்துல ‘பெட்ரோமேக்ஸ் லைட்டேதான் வேணுமா?’ சீன்ல, ஒரே தடவைதான் உடைச்சேன்; ஒரே டேக்ல நடிச்சேன்’ என்று நடிகர் செந்தில் தெரிவித்தார்.

நடிகர் செந்தில், தன்னுடைய அனுபவங்களை தனியார் சேனல் ஒன்றில் கலந்துகொண்டு பகிர்ந்துகொண்டார்.

அப்போது அவர் தெரிவித்ததாவது:

இன்றைக்கு லட்சம் கோடின்னெல்லாம் சம்பளம் பேசிக்கிட்டிருக்கோம். ஆனா அன்னிக்கி அஞ்சாயிரமோ என்னவோதான் சம்பளம் கிடைச்சிச்சு. படிப்படியா முன்னுக்கு வந்து, மக்கள் மனசுல இடம்பிடிச்சதுதான் பெரிய சந்தோஷம்.

இன்னிக்கு சினிமாவை டிஜிட்டல்ல எடுக்கிறோம். அப்பல்லாம் பிலிம்ரோல்லதான் எடுக்கணும். அதுக்கு ஏகப்பட்ட செலவாயிரும். படத்தோட தயாரிப்பாளர்கள் சிலபேரு, படம் ஷூட்டிங் எடுக்கறப்போ, எவ்ளோ பிலிம் வேஸ்ட் பண்றாங்க, யார்யாரெல்லாம் எவ்ளோ டேக் வாங்குறாங்கன்னு பயத்தோடயும் டென்ஷனோடயும் பாத்துக்கிட்டே இருப்பாங்க.

அப்படித்தான் ‘வைதேகி காத்திருந்தாள்’ படத்துல அந்த பெட்ரோமேக்ஸ் லைட் சீனை டைரக்டர் ஆர்.சுந்தர்ராஜன் சார் எடுத்துக்கிட்டிருந்தார். அந்த சீன்ல ‘எப்படிண்ணே இது எரியுது’ன்னு பெட்ரோமேக்ஸ் லைட்டைப் புடிச்சு அழுத்துவேன். அது உடைஞ்சிரும். அந்தக் காட்சியை, ஒரே டேக்ல எடுத்தோம். ஒரே தடவைதான் உடைச்சேன். டைரக்டருக்கும் ஹேப்பி. புரொட்யூசருக்கும் சந்தோஷம்.

’பெட்ரோமேக்ஸ் லைட்டேதான் வேணுமா”ங்கற அந்த சீன், இத்தனை வருஷமானாலும் இன்னிக்கும் எல்லாராலயும் நினைக்கப்படுதுன்னா, அதுக்கு டைரக்டரும் கவுண்டமணி அண்ணனும் நானும்தான் காரணம். அதெல்லாம் சுவாரஸ்யமான சம்பவங்கள்.

இவ்வாறு நடிகர் செந்தில் தெரிவித்தார்.

 

 

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close