[X] Close

’தவமாய் தவமிருந்து’, ‘ஆட்டோகிராஃப்’ மாதிரி ‘திருமணம்’ படமும் தாக்கத்தை ஏற்படுத்தும்! - இயக்குநர் சேரன்


cheran

இயக்குநர் சேரனின் ‘திருமணம் - சில திருத்தங்களுடன்’

  • kamadenu
  • Posted: 09 Feb, 2019 10:31 am
  • அ+ அ-

ம.மோகன்

சமூகத்தின் மீதும் சக மனிதன் மீதும் அன்பை, அக்கறையைப் பொழியக் கற்றுத்தரும் படங்கள் சேரனுடையவை. இம்முறை ‘திருமணம் – சில திருத்தங்களுடன்’ என்ற படத்தின் மூலம் கல்யாணக் கதை சொல்ல வந்திருக்கிறார்.

அவரைச் சந்தித்து உரையாடியதிலிருந்து ஒரு பகுதி..

 திருமணம் பற்றிய புரிதலை எடுத்துக் கூறத்தான் இந்தப் படமா?

ஒரு திருமணம்னு வந்துட்டா அதுல கௌரவம், கருத்து வேறுபாடு, வரதட்சணை, ஒற்றுமையின்மை, மரியாதை இப்படி ஆயிரம் கிளைக்கதைகள் இருக்கு.

திருமணத்துக்குப் பிறகு ஏற்படுகிற உளவியல் ரீதியான பிரச்சினைகள் என்ன, அவற்றை எப்படிச் சரிசெய்வது? திருமணம் நடப்பதற்கு முன்பே இதை எப்படி யோசிக்க முடியும்கிற கோணத்துலதான் இதுல தொட்டிருக்கேன்.

‘தவமாய்த் தவமிருந்து’படத்துல அப்பாவோட அன்பு, ‘ஆட்டோகிராஃப்’ படத்துல கடந்து வந்த காதலின் நினைவுகள் பற்றியும் தாக்கம் உருவான மாதிரி, திருமணம்னு வந்துட்டா எல்லாரும் தங்களைத் தொடர்புபடுத்தி பார்க்கிற படமா இது இருக்கும்.

படத்தில் உங்களது கதாபாத்திரம்?

 என் படங்களில் ஒவ்வொரு முக்கிய கதாபாத்திரமும் ஒவ்வொரு நேரத்துல கதையை நகர்த்திக்கொண்டு போவாங்க. இந்தப் படத்துல முக்கிய கதாபாத்திரம் தம்பி ராமையாவோட பையன் உமாபதி. தன்னோட திறமையால முன்னுக்கு வரணும்னு ஓடுகிறவர். கதையில நான் ஒரு மையப்புள்ளி. சுகன்யா படம் முழுக்க வர்றாங்க. அப்படி ஒரு ரோல்.

எனக்கு மாமாவாக தம்பி ராமையா வர்றார்.மனோபாலா, பாலசரவணன்னு நிறையப் பேர் இருக்காங்க. ஒவ்வொருவரும் கதையோடஒவ்வொரு காலகட்டத்த பேச வைப்பாங்க.

இவ்வாறு சேரன் தெரிவித்தார்.

வாக்களிக்கலாம் வாங்க

'கேம் ஓவர் ' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close