[X] Close

‘மெட்ரோ’ ஆனந்த கிருஷ்ணன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி


metro-ananda-krishnan-direct-vijay-antony

  • காவேரி மாணிக்கம்
  • Posted: 08 Feb, 2019 16:36 pm
  • அ+ அ-

‘மெட்ரோ’ ஆனந்த கிருஷ்ணன் இயக்க இருக்கும் படத்தில் ஹீரோவாக நடிக்கிறார் விஜய் ஆண்டனி.

விதார்த் நடிப்பில் வெளியான ‘ஆள்’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் ஆனந்த கிருஷ்ணன். 2014-ம் ஆண்டு இந்தப் படம் வெளியானது. இதைத் தொடர்ந்து, 2016-ம் ஆண்டு ‘மெட்ரோ’ என்ற படத்தை இயக்கினார். ஆக்‌ஷன் க்ரைம் படமான இது, பரவலான கவனத்தைப் பெற்றது.

அதன் பின்னர், அசோக் செல்வனை ஹீரோவாக வைத்து ‘ஆக்ஸிஜன்’ என்ற படத்தைத் தொடங்கினார் ஆனந்த கிருஷ்ணன். ஆனால், சில பிரச்சினைகளால் அந்தப் படம் பாதியிலேயே நிற்கிறது.

இந்நிலையில், விஜய் ஆண்டனியை வைத்து அடுத்த படத்தை ஆனந்த கிருஷ்ணன் இயக்கப் போவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஆக்‌ஷன் த்ரில்லர் படமாக இது இருக்கலாம் என்று கூறப்படுகிறது. விரைவில் இந்தப் படம் பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விஜய் ஆண்டனி நடிப்பில் ‘கொலைகாரன்’, ‘அக்னிச் சிறகுகள்’ என இரண்டு படங்களின் படப்பிடிப்பு முடிவடைந்து, போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. பாபு யோகேஸ்வரன் இயக்கிவரும் ‘தமிழரசன்’ படத்தில் தற்போது நடித்து வருகிறார் விஜய் ஆண்டனி. இளையராஜா இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close