[X] Close

தொலைக்காட்சி ஒளிபரப்பிலும் புதிய சாதனையைத் தொட்டது சர்கார்


sarkar-premier

  • kamadenu
  • Posted: 08 Feb, 2019 10:09 am
  • அ+ அ-

விஜய் நடிப்பில் உருவான 'சர்கார்' திரைப்படம், தொலைக்காட்சி ஒளிபரப்பிலும் புதிய சாதனையைத் தொட்டுள்ளது.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார், ராதாரவி, யோகிபாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'சர்கார்'. சன் பிக்சர்ஸ் தயாரித்த இப்படம் உலகளவில் மிகப் பிரம்மாண்டமாக வெளியிடப்பட்டது. வசூல் ரீதியாக மாபெரும் சாதனையை நிகழ்த்தியது.

இப்படத்தை ஜனவரி 26-ம் தேதி சிறப்பு ஒளிபரப்பாக சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பினார்கள். அதிலும் புதிய சாதனை நிகழ்த்தியது. அப்படம் ஒளிபரப்பிய போது 16906 இம்பிரஷன்ஸ் பெற்றுள்ளது. இது மிகப்பெரிய சாதனையாகும்.

இப்பட்டியலில் விஜய் ஆண்டனி நடித்த 'பிச்சைக்காரன்' முதல் இடத்தில் உள்ளது. இப்படம் 17696 இம்பிரஷன்ஸ் பெற்றது. அதனைத் தொடர்ந்து 'பாகுபலி 2' 17070 இம்பிரஷன்ஸ் பெற்றது. இவ்விரண்டு படங்களைத் தொடர்ந்து 3-வது இடத்தை பெற்றுள்ளது 'சர்கார்'.

கதை சர்ச்சை, இலவசப் பொருட்கள் தொடர்பான சர்ச்சை என பல்வேறு சர்ச்சைகளைத் தாண்டி வெளியானது 'சர்கார்'. வசூல் ரீதியாக வெற்றி பெற்றது மட்டுமன்றி, தற்போது தொலைக்காட்சி ஒளிபரப்பிலும் சாதனை புரிந்துள்ளதால் பெரும் மகிழ்ச்சியில் உள்ளது படக்குழு.

இப்படத்தைத் தொடர்ந்து தற்போது ரஜினி நடிக்கவுள்ள படத்துக்கான கதை விவாதத்தில் ஈடுபட்டு வருகிறார் இயக்குநர். ஏ.ஆர்.முருகதாஸ். இதன் படப்பிடிப்பு மார்ச் மாதத்தில் தொடங்கவுள்ளது. லைகா நிறுவனம் தயாரிக்கவுள்ளது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close