[X] Close

கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றும் ரஜினி - ஷங்கர்


shankar-rajinikanth

ரஜினி - ஷங்கர்

  • kamadenu
  • Posted: 08 Feb, 2019 09:45 am
  • அ+ அ-

'2.0' பட சமயத்தில் லைகா நிறுவனத்துக்குக் கொடுக்கப்பட்ட வாக்குறுதியை, ரஜினி மற்றும் ஷங்கர் இருவருமே நிறைவேற்றிக் கொடுத்துள்ளனர்.

ஷங்கர் இயக்கத்தில் ரஜினி, அக்‌ஷய்குமார், எமி ஜாக்சன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் '2.0'. லைகா நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்தது. இந்தியத் திரையுலகில் அதிக பொருட்செலவில் உருவான படம் '2.0' தான் என்பது நினைவுக் கூரத்தக்கது.

இப்படம் உருவாக்கத்தின் போது, எதிர்பார்த்ததை விட பொருட்செலவு அதிகமானது. அதற்கு காரணம், கிராபிக்ஸ் காட்சிகள் கொடுக்கப்பட்ட நிறுவனம் திவாலானது. இதனால், வேறொரு நிறுவனத்துக்கு அக்காட்சிகளை மாற்றிக் கொடுத்தனர். இதனால் படம் தாமதமானது மட்டுமன்றி, படத்தின் பட்ஜெட்டும் எகிறியது.

இந்தச் சமயத்தில் எவ்வித கேள்வியும் கேட்காமல், படத்தின் தரத்தில் உறுதியாக இருந்தது லைகா நிறுவனம். மேலும், படம் வெற்றி பெற்றாலும் அதன் முதலீட்டுக்கு ஏற்ற வெற்றி என்பது அப்படம் இன்னும் பெறவில்லை. சீனாவில் வெளியிட ஆயத்தமாகி  வருகிறது படக்குழு. அங்கு வெளியிட்டால் லாப சதவீதம் அதிகரிக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

இந்தச் சமயத்தில்தான் லைகா நிறுவனத்துக்கு ரஜினி - ஷங்கர் இருவருமே இன்னொரு படம் செய்து தருகிறோம் என்று வாக்குறுதி கொடுத்துள்ளனர். அந்த வாக்குறுதியைத்தான் 'இந்தியன் 2' படமாக உருவாக்கி வருகிறார் ஷங்கர். கமல் நடித்து வரும் இப்படத்துக்கு வழக்கமாக வாங்கும் சம்பளத்தை விட குறைவாகவே வாங்கியுள்ளார் ஷங்கர் என்று தெரிவித்தார்கள்.

மேலும், ரஜினி கொடுத்த வாக்குறுதியை வைத்து தான் ஏ.ஆர்.முருகதாஸ் படத்தை தொடங்கியுள்ளது லைகா நிறுவனம். மார்ச் மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. தற்போது இதற்கான முதற்கட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. 

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close