[X] Close

அப்பப்போ ‘தளபதி 63’ அப்டேட் குடுங்க: பாடலாசிரியர் விவேக்கிடம் கேட்ட சந்தோஷ் நாராயணன்


santhosh-narayanan-asked-thalapathy-63-to-lyricist-vivek

  • காவேரி மாணிக்கம்
  • Posted: 07 Feb, 2019 16:48 pm
  • அ+ அ-

அப்பப்போ ‘தளபதி 63’ படத்தின் அப்டேட் குடுங்க என பாடலாசிரியர் விவேக்கிடம் ட்விட்டரில் கேட்டுள்ளார் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன்.

‘தெறி’ மற்றும் ‘மெர்சல்’ படங்களைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக விஜய்யை இயக்கி வருகிறார் அட்லீ. ஏஜிஎஸ் என்டெர்டெயின்மென்ட்ஸ் தயாரிக்கும் இந்தப் படம், தற்போது ‘தளபதி 63’ என்ற பெயரில் அழைக்கப்பட்டு வருகிறது.

விஜய் ஜோடியாக நயன்தாரா நடிக்க, கதிர், விவேக், யோகி பாபு, ரோபோ ஷங்கர் மகள் இந்திரஜா ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இதன் படப்பிடிப்பு, சென்னையில் தொடங்கி நடைபெற்று வருகிறது. வருகிற தீபாவளிக்கு இந்தப் படம் ரிலீஸாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் படத்தில் விஜய்யின் கதாபாத்திரத்துக்கு மைக்கேல் எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தில் விளையாட்டுப் பயிற்சியாளராக நடிக்கிறார் விஜய். எனவே, அவருடைய உடற்கட்டு, அதற்கேற்றவாறு மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்தப் படத்துக்கு, ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்கிறார். கலை இயக்குநராக முத்துராஜ் பணியாற்ற, ரூபன் எடிட் செய்கிறார்.

இந்நிலையில், ‘ஹாய் விவேக் சார், எப்படி இருக்கீங்க? நல்லா சாப்பிடுங்க. நிறைய தண்ணீர் குடிங்க. குடும்பத்தைக் கேட்டதா சொல்லுங்க. அப்படியே ‘தளபதி 63’ அப்டேட்ஸ் அப்பப்போ குடுங்க. இங்க எல்லாம் நல்லா போகுது’ என ட்விட்டரில் பாடலாசிரியர் விவேக்கைக் குறிப்பிட்டு ட்வீட் செய்துள்ளார் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன்.

அதற்கு, ‘ரெண்டு’ படத்தில் இடம்பெற்றுள்ள கரிகாலன் மேஜிக் ஷோ வடிவேலு புகைப்படத்தைப் பதிவிட்டு, ‘ஏன் தெய்வமே...’ என நகைச்சுவையுடன் பதில் அளித்துள்ள விவேக், மற்றொரு ட்வீட்டில், ‘நிறைய வேலைப்பளு இருப்பதால் உங்களுடன் பேசாமல் விட்டுவிட்டேன். உங்களுக்கு அப்டேட் குடுக்காமலா? விரைவில் தருகிறேன். அப்படியே தரவில்லை என்றாலும் உங்கள் வீட்டுப்பிள்ளையாக நினைத்து மன்னிச்சு விட்டுடணும்’ எனத் தெரிவித்துள்ளார்.

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close