[X] Close

மீண்டும் பரபரப்பாகும் 'இந்தியன் 2' படக்குழு


indian-2-shooting

  • kamadenu
  • Posted: 07 Feb, 2019 11:44 am
  • அ+ அ-

பிப்ரவரி 11-ம் தேதி அடுத்த கட்ட படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாக, மீண்டும் பரபரப்பாக தங்களது பணிகளைத் தொடங்கியுள்ளது 'இந்தியன் 2' படக்குழு.

கமல்ஹாசன் நடிப்பில், ஷங்கர் இயக்கத்தில் வெளியான படம் ‘இந்தியன்’. தற்போது அதன் 2-ம் பாகத்தில் மீண்டும் கமல் - ஷங்கர் இணைந்து பணிபுரிந்து வருகிறார்கள். லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது.

சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கப்பட்டது. அதற்குப் பிறகு சில நாட்களிலேயே நிறுத்தப்பட்டது. இதனால், படக்குழுவினரிடையே பிரச்சினை, தயாரிப்பு நிறுவனத்தில் பணமில்லை என்று பல்வேறு காரணங்கள் சொல்லப்பட்டன.

அனைத்தையும் பொய்யாக்கும் விதமாக பிப்ரவரி 11-ம் தேதி மீண்டும் சென்னையில் 'இந்தியன் 2' படப்பிடிப்பு தொடங்கப்படவுள்ளது. இதுவும் சில நாட்கள் மட்டுமே நடைபெறும். அதனைத் தொடர்ந்து பாஹமாஸ் மற்றும் பொலிவியா நாடுகளில் சில முக்கிய காட்சிகளை படமாக்க பயணப்படவுள்ளது படக்குழு.

இப்படத்தில் கமலுடன் காஜல் அகர்வால், நெடுமுடி வேணு, போமன் இரானி உள்ளிட்டோர் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். அனிருத் இசையமைக்கும் இப்படத்துக்கு ரவிவர்மன் ஒளிப்பதிவாளராக பணிபுரிந்து வருகிறார். கலை இயக்குநராக முத்துராஜ் பணியாற்றிவருகிறார்.

கமலுக்கு வில்லனாக அக்‌ஷய்குமார், அஜய் தேவ்கான், அபிஷேக் பச்சன் என பல்வேறு பெயர்கள் அடிபட்டு வருகின்றன. ஆனால், படக்குழுவினர் இதுவரை யாரையுமே அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை. எழுத்தாளர்கள் ஜெயமோகன், கபிலன் வைரமுத்து, லட்சுமி சரவணகுமார் மூவரும் இணைந்து ‘இந்தியன் 2’வுக்கான வசனங்களை எழுதியுள்ளனர்.

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close