[X] Close

மீண்டும் ’ஹரஹர மஹாதேவகி’ சேன்டி - கவுதம் கார்த்திக் கூட்டணி


sandy-gowtham-karthik

கவுதம் கார்த்திக் - சேன்டி

  • kamadenu
  • Posted: 07 Feb, 2019 11:23 am
  • அ+ அ-

சேன்டி இயக்கத்தில் உருவாகவுள்ள புதிய படத்தின் நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் கவுதம் கார்த்திக்

கவுதம் கார்த்திக் - சேன்டி இருவரும் இணைந்து 'ஹர ஹர மஹாதேவகி' மற்றும் 'இருட்டு அறையில் முரட்டு குத்து' ஆகிய படங்களில் இணைந்து பணிபுரிந்தனர். இரண்டுமே வசூல் ரீதியாக பெரும் வரவேற்பைப் பெற்றவை என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது மூன்றாவது முறையாக இந்தக்கூட்டணி இணைந்துள்ளது. கடந்த இரண்டு படங்களுக்குமே அடல்ட் காமெடி பாணியில் இருந்தது. இம்முறை த்ரில்லர் பாணியிலான கதையில் இணைந்து பணிபுரியவுள்ளார். இப்படத்துக்கு கண்டிப்பாக 'யு' சான்றிதழ் பெறவேண்டும் என்று தெளிவாக முடிவெடுத்துள்ளது படக்குழு.

இந்தப் படத்தில் நாயகிகள் என்று எவரும் இல்லை. அதேபோல், பாடல்களும் கிடையாது. முழுக்க கோவா பின்னணியில் நடக்கும் ஒரு த்ரில்லர் கதையாகும். ஒட்டுமொத்த படப்பிடிப்பையும் ஒரே கட்டமாக  முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது. இதற்கு 'தீமை தான் வெல்லும்' என தலைப்பிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், படக்குழு இப்பெயரை இன்னும் உறுதிப்படுத்தவில்லை.

மேலும், சன்தோஷ் பி.ஜெயக்குமார் என்ற பெயரையும் சேன்டி என மாற்றிவிட்டார். தனது பெயர் ரொம்ப நீளமாக இருப்பதால், சுருக்கிவிட்டதாக தெரிவித்துள்ளார்.

வாக்களிக்கலாம் வாங்க

'தேவ்' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close