[X] Close

’தென்றல் வந்து தீண்டும்போது…’ பாட்டுக்கு ஆர்கெஸ்ட்ரா பண்ணியது யார் தெரியுமா?


avadharam-karthikraja

கார்த்திக் ராஜா

  • வி.ராம்ஜி
  • Posted: 06 Feb, 2019 21:32 pm
  • அ+ அ-

நாசர் நடித்து இயக்கிய அவதாரம் படமும் அந்தப் படத்தில் இடம்பெற்ற பாடல்களும் நமக்கு இப்போதும் நினைவிருக்கும். அந்தப் படத்தின் அனைத்துப் பாடல்களையும் மிகப்பெரிய ஹிட்டாக்கிக் கொடுத்திருந்தார் இளையராஜா.

குறிப்பாக, ‘தென்றல் வந்து தீண்டும்போது என்ன வண்ணமோ’ என்ற பாடல் இன்றைக்கும் பலரது இரவுப் பாடலாக கேட்டு ரசிக்கப்படுகிறது.

இளையராஜா மகன்களான யுவன் ஷங்கர்ராஜாவும் மூத்தவரான கார்த்திக் ராஜாவும் இசையமைப்பாளர்கள்தான். இதில் யுவன் ஏராளமான படங்களுக்கு இசையமைத்து வருகிறார். கமலின் ’காதலா காதலா’, அஜித்தின் ’உல்லாசம்’, பிரபுதேவாவின் ‘நாம் இருவர் நமக்கு இருவர்’ மாதவனின் ‘டும்டும்டும்’ முதலான பல படங்களுக்கு கார்த்திக்ராஜா இசையமைத்துள்ளார்.

இந்தநிலையில், இயக்குநர் வெங்கட்பிரபு தனது ட்விட்டர் பக்கத்தில், வீடியோ ஒன்றைப் பகிர்ந்துள்ளார். அது, தனியார் யுடியூப் சேனல் ஒன்றில், கார்த்திக் ராஜா பற்றிய தொகுப்பு.

‘என்னுடைய கூற்று தவறில்லையெனில், ’அவதாரம்’படத்தில் இடம்பெற்ற ‘தென்றல் வந்து தீண்டும்போது’ பாடலுக்கு ஆர்கெஸ்ட்ரா செய்தது, எங்களின் மூத்த அண்ணனான கார்த்திக்ராஜா என்று நினைக்கிறேன்’ எனப் பதிவிட்டுள்ளார்.

அத்துடன் வெங்கட்பிரபு, ‘இதுகுறித்து யுவன் உறுதிசெய்யவேண்டும்’ என்றும் கேட்டிருந்தார்.

இதனிடையே, ’உறுதியாகத் தெரியவில்லை. அப்பாவைத்தான் கேட்கவேண்டும். நானும் அப்படித்தான் நினைக்கிறேன்’ என்று பதிலளித்துள்ளார் யுவன் ஷங்கர்ராஜா.

 

 

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close